
Shihan Hussaini: நடிகர் விஜய் நடித்த பத்ரி படத்தின் மூலம் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற கராத்தே பயிற்சியாளர் ஷிகான் ஹுசைனி காலமானார்.
புன்னகை மன்னன் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமான இவருக்கு பெரிய அளவில் அடையாளம் கொடுத்தது பத்ரி படம்.
சமீபத்தில் ரத்த புற்று நோய்க்காக சிகிச்சை எடுத்துக்கொண்ட இவர் பகிர்ந்த நிறைய விஷயங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.
ஷிகான் ஹுசைனி காலமானார்!
தான் உயிர் வாழ வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு இரண்டு பாட்டில் ரத்தம் ஏற்ற வேண்டும் என்று ரொம்பவும் உருக்கமாக பகிர்ந்து இருந்தார்.
அதேபோன்று தன்னுடைய உடலை மருத்துவ கல்லூரிக்கு தானம் செய்திருந்தார். மேலும் அவருடைய இதயத்தை மட்டும் தன்னுடைய வில்வித்தை பயிற்சி மாணவர்களிடம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த நிலையில் அதிகாலை 1.45 மணிக்கு அளவிற்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்திருக்கிறார்.
இவருடைய உடலை அஞ்சலிக்காக பெசன்ட் நகரில் உள்ள அவருடைய வில்வித்தை மையத்தில் வைக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள் அஞ்சலிக்காக வைத்த பிறகு இவருடைய உடல் சொந்த ஊரான மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட இருக்கிறது