Sivakarthikeyan: விஜய் சினிமாவை விட்டு ஒதுங்க உள்ள நிலையில் அந்த இடத்தில் சிவகார்த்திகேயன் தான் இருக்கப் போகிறார் என பேசப்பட்டு வருகிறது. அதோடு கோட் படத்தில் இனிமேல் நீதான் பார்த்துக்கணும் என விஜய் சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கி கொடுத்திருப்பார்.
அதிலிருந்து தளபதியே தன்னுடைய இடத்திற்கு சிவகார்த்திகேயனை தேர்ந்து எடுத்துவிட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் வளர்த்த கடா மாறில் முட்டியது போல் சிவகார்த்திகேயனால் விஜய்க்கு ஒரு பிரச்சனை வந்திருக்கிறது.
எச் வினோத் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகி வருகிறது ஜனநாயகன். விஜய்யின் சினிமா கேரியரில் கடைசி படம் என்பதால் ஒட்டு மொத்த சினிமாவின் கவனமும் இந்த படத்தின் மீது இருந்து வருகிறது.
விஜய்யின் படத்திற்கு சிவகார்த்திகேயனால் வந்த சிக்கல்
நேற்று ஜனநாயகன் படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 9 ரிலீசாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த சூழலில் ஜனநாயகன் படத்திற்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் வெளியாக உள்ளதாக தகவல் வந்துள்ளது.
அமரன் என்ற பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜெயம் ரவி, அதர்வா போன்ற ஹீரோக்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
பராசக்தி படமும் தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்து இருக்கின்றனர். விஜய்யின் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்ததால் பராசக்தி படம் தள்ளி ரிலீஸாக அதிக வாய்ப்பு இருக்கிறது.