சின்னத்திரை சேனல்களில் சன் டிவிக்கு தான் முதலிடம். ஆனால் இப்போது விஜய் டிவி போட்டிக்கு வந்துவிட்டது. இரு சேனல்களும் டிஆர்பியில் ஒன்றுக்கொன்று சளைத்தது இல்லை என காட்டி வருகிறது.
அதில் இரு சேனல்களில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் ஒரே மாதிரி இருக்கும். அப்படித்தான் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவி டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை தொடங்கியது.
விஜய் டிவியில் பெரிய அளவில் வெற்றி பெற்ற குக் வித் கோமாளி தற்போது 6வது சீசனை தொடங்க இருக்கிறது. அதற்கான ப்ரோமோக்கள் கூட வந்து விட்டது.
டாப் குக்கு டூப் குக்கு 2 ப்ரோமோ எங்க.?
இன்னும் சில வாரங்களில் நிகழ்ச்சி ஆரம்பமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி இருக்கும் நிலையில் இன்னும் சன் டிவியில் இருந்து அறிவிப்பு வராதது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
ஏனென்றால் டிஆர்பிக்காக சேனல் தரப்பு என்ன வேண்டுமானாலும் செய்யும். அப்படித்தான் டாப் குக்கு டூப் குக்கு முதல் சீசன் ஆரம்பிக்கப்பட்டு வெற்றியும் அடைந்தது.
அதிலும் குக் வித் கோமாளி வெங்கடேஷ் பட் உட்பட பலர் சன் டிவிக்கு தாவினார்கள். இது சர்ச்சையாக பேசப்பட்டாலும் இப்போது சீசன் 2வை ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதனாலயே இப்போது கோக் வித் கோமாளி ப்ரோமோவை பார்த்த இணையவாசிகள் சன் டிவிக்கு கமெண்ட் போட்டு வருகின்றனர். விஜய் டிவி முதல்ல இறங்கிட்டாங்க உங்க ப்ரோமோ இன்னும் வரலையே என நெட்டிசன்கள் நக்கல் கமெண்ட்டும் கொடுத்து வருகின்றனர்.
விரைவில் டாப் குக்கு டூப் குக்கு 2 ப்ரோமோ வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை எல்லாமே டிஆர்பி தான்.