Kamal-Thug Life: மணிரத்னம், கமல் பல வருடங்களுக்குப் பிறகு தக் லைஃப் படத்தின் மூலம் இணைந்துள்ளனர். ஜூன் 5-ம் தேதி படம் வெளியாகிறது. அதற்கு முன்பே இப்போது பிரமோஷன் வேலைகள் தொடங்கியுள்ளது.
நேற்று படத்தின் முதல் சிங்கிள் பாடலான ஜிங்குச்சா வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது. இனி கல்யாண வீடுகளில் இந்த பாட்டு தான் என ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க தக் லைஃப் பட விழாவில் ஒட்டுமொத்த பட குழுவும் கலந்து கொண்டு மீடியாக்களின் கவனத்தை பெற்றுள்ளனர். அதில் பல விஷயங்கள் குறித்து அவர்கள் பேசினாலும் கமல் ரியல் தக் லைஃப் கொடுத்த ஒரு சம்பவமும் நடந்துள்ளது.
தக் லைஃப் பதில் கொடுத்த ஆண்டவர்
அதாவது தொகுப்பாளினி திரிஷாவிடம் திருமணம் குறித்து கேள்வி கேட்டார். அதற்கு அவரும் பார்க்கலாம் என நாசுக்காக பதில் அளித்தார். உடனே கமலிடம் என்ன சார் இப்படி சொல்றாங்க என கேள்வியை திருப்பிவிட்டார்.
உடனே ஆண்டவர் ஒரு பழைய சம்பவத்தை கூறினார். அதாவது எம் பி ஜான் பிரிட்டாஸ் கமலிடம் நீங்கள் ராமரை கும்பிடும் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இப்படி ரெண்டு கல்யாணம் செய்வதெல்லாம் சரியா என்று கேட்டிருக்கிறார். உடனே உலக நாயகன் நான் ராமர் கிடையாது. அவங்க அப்பா மாதிரி. இன்னும் பாக்கி இருக்கு என கூறியிருக்கிறார்.
அந்த விஷயத்தை தற்போது அவர் கூறியதை கேட்டு ஒட்டுமொத்த அரங்கமும் கைதட்டி சிரித்தது. இப்படி எல்லாம் நாசுக்காக பேச ஆண்டவரால் மட்டுமே முடியும்.
சர்ச்சையை கூட சுவாரசியமாக மாற்றி விடுவார். பேச்சில் வல்லவர் ஆயிற்றே அவரை வெல்ல முடியுமா? என இதை பார்த்த நெட்டிசன்கள் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.