ஆனந்தியை வெறுக்கும் அன்பு, மித்ராவால் சிக்கும் ஆதாரம்.. பரபரப்பான திருப்பங்களுடன் சிங்கப்பெண்ணே!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனந்தியின் கர்ப்பத்திற்கு அன்பு தான் காரணம் என அவளுடைய தோழிகள் சல்மா மற்றும் ரெஜினா சந்தேகப்படுகிறார்கள்.

அவர்களின் சந்தேகத்தை போக்குவதற்காக ஆனந்தி அன்பு விடம் நெருக்கமாக இருக்க முயற்சிக்கிறாள். இது அன்புக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுப்பதோடு ஆனந்தியை விலக்கியும் விடுகிறான்.

ஆனந்தியை வெறுக்கும் அன்பு

அதே நேரத்தில் ஆனந்தியின் இந்த விஷயம் அன்புக்கு ஒரு வித வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அன்பு மீது எந்த தவறும் இல்லை என ரெஜினா மற்றும் ஆனந்தி இடம் ஒப்புக்கொள்கிறார்கள்.

இவர்கள் பேசுவதை கேட்டு மித்ராவுக்கு உண்மையை கண்டுபிடித்து விடுவார்களோ என்ற பயம் ஏற்படுகிறது. மித்ராவின் பயத்தாலேயே நடந்த விஷயத்தை அவள் வெளியில் சொல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.

மேலும் மித்ரா மூலமாக வேலு மற்றும் வாணி சென்னையில் இருப்பது வானியல் குடும்பத்திற்கு தெரிய வருகிறது. இதனால் வேலுவுக்கும் ஒரு பெரிய ஆபத்து ஏற்பட இருக்கிறது.

ஒரே நேரத்தில் ஆனந்தி தன்னுடைய கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று கண்டுபிடிப்பதோடு வேலுவையும் பிரச்சனையில் இருந்து மீட்க வேண்டும்.

மேலும் அன்பு ஆனந்தியின் அவளுக்கு என்ன ஆனது என அவளுடைய தோழிகள் மூலம் அறிந்து கொள்ளவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.