2025 ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணிக்கும் வீரர்களை ஏலத்தில் எடுக்க 120 கோடிகள் கொடுக்கப்பட்டுள்ளது.. ஆனால் சென்னை அணி தேவையில்லாத வீரர்களை எடுத்து இப்பொழுது இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது என முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கடுமையாக விமர்சித்துள்ளார்.
முன்னதாக சென்னை அணி 65 கோடிகளுக்கு சிஎஸ்கே வீரர்களான ரவீந்திர ஜடேஜா, சிவம் தூபே, மகேந்திர சிங் தோனி, ருத்ராஜ் கெய்க்வார்டு, மதீஷாபதிரான போன்ற வீரர்களை தக்கவைத்து கொண்டுள்ளது. இதற்கே ஒரு பெரிய தொகை கொடுத்து இருந்தாலும். மாற்று வீரர்களை தேர்ந்தெடுப்பதில் கோட்டை விட்டுள்ளனர் என ரெய்னா புலம்பித் தள்ளுகிறார்.
மீதம் இருக்கும் 55 கோடிகளில் ரச்சின் ரவீந்தரா, டெவான் கான்வே, ரவிச்சந்திரன் அஸ்வின், ராகுல் திரிபாதி, நூர் அகமது, கலீல் அகமது போன்ற வீரர்களை எடுத்துள்ளனர். இந்த வீரர்களின் செயல்பாடு குறித்தும் தற்போது ரெய்னா விமர்சித்துள்ளார்.
சிஎஸ்கே அணியை பொருத்தவரை நூர் அகமதுவை தான் 10 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர். அவர் தன் பங்கிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதைப்போல 4.8 கோடிகள் விலை கொடுத்து வாங்கிய கலீல் அகமதும் தன் பங்கிற்கு நன்றாக விளையாடு வருகிறார்.
அதிக விலை கொடுக்கப்பட்டு தேர்வாகிய மற்ற வீரர்கள் எல்லோரும் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக அதிரடி வீரர் ரச்சின் ரவீந்தரா ஒரு மேட்சில் கூட சோதிக்கவில்லை. இவர்கள்தான் இப்படி என்றால் சென்னை பிட்சை நன்கு அறிந்த ரவிச்சந்திரன் அஸ்வினும் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இப்படி 120 கோடி ரூபாயை தாரவார்த்து விட்டனர் என ஸ்டீபன் ஃபிளமிங்கையும், அணி நிர்வாகத்தையும் குறை கூறுகிறார் ரெய்னா.