அரசாங்கமே கமலை அமெரிக்காவுக்கு அனுப்பப் போகும் சம்பவம்.. ஆண்டவருக்கு உதயநிதி கொடுத்த அவார்டு

கமல் டெக்னாலஜி அரசன். நாளை வரப்போகும் டெக்னாலஜியை இன்று சொல்லக்கூடிய ஆண்டவர். சமீபத்தில் தான் அமெரிக்காவிலிருந்து திரும்பினார். ஆறு மாத படிப்புக்கு பிறகு இந்தியா வந்த கமல் தக்லைப் படத்தின்ப்ரோமோஷனில் பிசியாக வேலை செய்து வருகிறார்.

இப்பொழுது நம் நாட்டின் அரசாங்கமே அவரை மீண்டும் அமெரிக்காவுக்கு அனுப்பும் திட்டத்தில் இறங்கியுள்ளது. கூடிய விரைவில் ஆண்டவர் அமெரிக்கா செல்ல இருக்கிறார். இதற்கு முழுமூச்சாக பாடுபட்டுக் கொண்டிருப்பவர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

ஏஐ டெக்னாலஜியை கற்றுக் கொண்டு வந்தவரை இப்பொழுது அரசாங்க செலவிலேயே மீண்டும் அவரை அனுப்ப உள்ளனர். தமிழ்நாட்டு அரசாங்கம்
சென்னை திருமயிலைசையில் பிலிம் சிட்டி ஒன்று கட்டப் போகிறது. அதற்காக இடமெல்லாம் ஒதுக்கி உள்ளது. உதயநிதி அடிக்கடி அங்கே சென்று பார்வையிட்டு வருகிறார்.

ஏற்கனவே ஜெயலலிதா அம்மா அமைத்த பிலிம் சிட்டி இப்பொழுது ஐடி பார்க்காக மாறிவிட்டது. அதனால் மீண்டும் புதிதாக கட்ட போகிறது. அந்த கட்டிடம் கட்டுவதற்கு தலைமை ஆலோசகராக கமலை நியமிக்க உள்ளனர். அதற்காக அடிக்கடி முதலமைச்சரையும் சந்தித்து வருகிறார் உலக நாயகன்.

இந்த கட்டிடத்தை அமெரிக்க தொழில்நுட்பத்தில் கட்ட திட்டமிட்டு வருகிறார்கள். அதற்காகத்தான் இப்பொழுது கமலை மீண்டும் அமெரிக்க அனுப்புவதற்கு ஏற்பாடு நடந்து வருகிறது. மிகவும் அனுபவம் வாய்ந்த கமலின் லோசனைப்படி இது நடந்தால் அருமையாக இருக்கும் என அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.