உழைச்சு முன்னுக்கு வாங்க, 71/2 கோடி சம்பளம் வாங்கிட்டு ஏன் எங்க பாட்ட வைக்குறிங்க.. கிழித்தெடுத்த கங்கை அமரன்

Ilayaraja: அண்ணன் இளையராஜாவுக்கு ஆதரவாக கங்கை அமரன் பேசிய வீடியோ தற்போது பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.

அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா இசை அமைத்த ஒத்த ரூபா தாரேன், ஏன் ஜோடி மஞ்ச குருவி போன்ற பாடல்கள் இடம் பெற்றிருந்தது.

கிழித்தெடுத்த கங்கை அமரன்

இதற்கு காப்புரிமை கேட்டு இளையராஜா வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் தான் கங்கை அமரன் அண்ணனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருக்கிறார்.

ஒரு படத்துக்கு ஏழரை கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து ஒரு இசையமைப்பாளரை புக் பண்ணுறீங்க. ஆனா நாங்க போட்ட பாட்ட அந்த படத்தில் வைக்கும் போது தான் அந்த பாட்டுக்கு கைதட்டு வருகிறது.

உழைத்து முன்னுக்கு வாங்க, உங்க இசையமைப்பாளரை அதே மாதிரி இசையை போட சொல்லுங்க. எங்களுடைய பாடலை எடுக்கும் போது நாங்கள் காப்புரிமை கேட்கத்தான் செய்வோம்.

ஆரம்ப காலத்தில் அன்னக்கிளி, பத்திரகாளி போன்ற படங்களில் இசை அமைக்கும் பொழுது குறுகிய சம்பளத்தை கொடுத்தார்கள்.

அதன் பின்னர்தான் அந்த பாடல்கள் எந்த அளவுக்கு வியாபாரமானது என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம்.

அதிலிருந்து தான் அண்ணன் தன் இசை அமைக்கும் பாடல்களுக்கு காப்புரிமை வாங்க ஆரம்பித்தார். எங்கள் பாடல்களுக்கு நாங்கள் காப்புரிமை கேட்பதில் எந்த தப்பும் இல்லை. இது உலக சட்டம் என்று பேசி இருக்கிறார்.