இடத்தை புடுச்சா மட்டும் போதாது, தக்க வச்சுக்க தந்திரமும் வேணும்.. நயன் விவகாரத்தில் த்ரிஷா செய்த தில்லாலங்கடி வேலை

Trisha: நயன்தாரா இடத்தை குறுகிய இடைவெளியில் த்ரிஷா புடிச்சுட்டாங்க என்பது இப்போது பரவலாக பேசப்படும் ஒன்று.

கடந்த இரண்டு வருடங்களாக பெரிய ஹீரோக்கள் ஆரம்பிக்கும் புது ப்ராஜெக்டக்கள் எல்லாவற்றிலும் த்ரிஷா தான் ஹீரோயினாக இருக்கிறார்.

த்ரிஷா செய்த தில்லாலங்கடி

நயன்தாராவின் இடத்தை புடிச்ச மட்டும் பத்தாது அதை தக்க வைக்கிறதுக்கு தந்திரமும் செய்யணும், அத சிறப்பா செஞ்சிருக்காங்க த்ரிஷாவின் ஆதரவாளர்கள். திரிஷா வளர வளர இன்னொரு பக்கம் நயன்தாராவை பற்றி நெகட்டிவ் விமர்சனங்கள் வெளியில் வந்தால்தான் இரண்டுக்கும் சமமாக இருக்கும்.

சமீபத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் இருந்து சுந்தர் சி நயன்தாராவை விலக்கி விட்டதாக ஒரு செய்தி பரவியது. இது குறித்து கேங்கர்ஸ் பட ப்ரமோஷன் பேட்டி ஒன்றில் சுந்தர்சியிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு நயன்தாரா மாதிரி ஒரு கடின உழைப்பாளியை யாராலும் பார்க்க முடியாது. அவருடைய சின்சியாரிட்டி பார்த்து நானே பிரமித்து போய் விட்டேன்.

ஏன் இந்த மாதிரி செய்தி எல்லாம் பரப்புறாங்க, யார் இதெல்லாம் பண்றது நிஜமாகவே தெரியவில்லை. இது போன்ற தொடர் வதந்திகளுக்கு பதில் சொல்ல எனக்கு நேரமும் இல்லை என்று சொல்லி இருக்கிறார்.

திரிஷாவின் ஆதரவாளர்கள் தான் பல பக்கத்திலும் புகுந்து இந்த மாதிரி நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பி வருகிறார்கள் என்பது இணையதள வாசிகளின் கருத்து.