2022 ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணி புதிதாக ஐ பி எல்லில் களமிறங்கியது. அப்பொழுது அந்த அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். வந்த முதல் சீசனிலேயே கோப்பையை வென்று அசத்தியது அந்த அணி. அது மட்டும் இல்லாமல் அடுத்த சீசனிலும் பைனல் வரை சென்றது.
வெற்றிகரமாக இரண்டு சீசனை விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி டிரேடிங் செய்தது. அதன் பின் அவர் மும்பை அணிக்கு சென்று விட்டார். அதை தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணி கடுமையான சரிவை சந்தித்தது.
இந்த சீசனில் அணியை கட்டமைக்கும் பொறுப்பை பயிற்சியாளர் ஆசிஸ் நெக்ரா எடுத்துக் கொண்டார். தைரியத்தோடு அசத்தலாக முடிவுகளை எடுத்து இப்பொழுது அணியை கட்டமைத்து நம்பர் ஒன்னாக இந்த சீசனில் உருவாக்கி விட்டார். ஏலத்திற்கு பல பிளான் போட்டு சரியான வீரர்களை தேர்வு செய்துள்ளார்.
இந்த தொடரில் கேப்டன் கில், திவாட்டியா, ஷாருக்கான், சாய் கிஷோர் போன்றவர்களை தக்கவைத்துக் கொண்டார். இதன் மூலம் பேட்டிங் யூனிட்டை செம்மையாக்கிவிட்டார். காயத்திலிருந்து குணமடைந்த முகமது சமியை இந்த முறை கழட்டி விட்டு விட்டார். அவருக்கு பதிலாக ஜாஸ் பட்லரை எடுத்து பேட்டிங்கை வலுப்படுத்தினார்
பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், இசாந்த் சர்மா, அர்ஷத் கான், ரபாடா போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களை எடுத்து பௌலிங் யூனிட்டையும் சரி செய்து விட்டார். இப்பொழுது சம பலத்தோடு அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது அணி.புள்ளி பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்கள்.