கிடைத்த அவப்பெயர்களை காரணத்தோடு உடைத்த சிம்பு.. அஸ்வந்த் மாரிமுத்துக்கு கொடுத்த வார்னிங் அலெர்ட்

தக்லைப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஜாரூராக போய்க் கொண்டிருக்கிறது. மணிரத்னம், சிம்பு, கமல் மூவரும் இறங்கி அடித்து வருகிறார்கள். ஜூன் 5 இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதனிடையே பிரமோஷன் நிகழ்ச்சியில் சிம்புவிடம், முன்னால் அவருக்கு கிடைத்த அவப்பெயர்களை பற்றி கேட்டுள்ளனர்.

சிம்பு என்றால் சூட்டிங் வரமாட்டார், வந்தாலும் லேட்டாக வருவார், அவரை வைத்து படம் பண்ணுவது கடினம் என்றெல்லாம் முன்பு அவருக்கு கெட்ட பெயர் இருந்தது. அதைப்பற்றி நிகழ்ச்சி தொகுப்பாளர் சிம்புவிடம் திடீரென கேட்டு விட்டார்.

அதற்கு சிம்பு, டைரக்டரே லேட்டாக தான் வருகிறார், நான் மட்டும் ஏன் காத்துக் கிடக்க வேண்டும் என்றார். அது மட்டும் இல்லாமல் ஸ்பாட்டிற்கு வந்த பிறகுதான் என்ன செய்ய வேண்டும் என்பதை கூட யோசிக்கிறார்கள். தூரத்தில் நடைபெறும் ஷூட்டிங்கை, மானிட்டர்அருகில் உட்கார்ந்து பார்த்துவிட்டு, மைக்கில் ஏதேதோ சொல்கிறார்கள்.

இப்படி நடைபெறும் சூட்டிங்கில் நாம் தான் பொறுமை காக்க வேண்டும். இது பல நேரங்களில் எரிச்சலை ஏற்படுத்தி விடும், அதனால் நானும் கொஞ்சம் அசால்ட்டாக இருந்து விட்டேன் என்று பதில் அளித்தார். ஆனால் மணிரத்தினம் அப்படி கிடையாது, காலையில் 5:30 மணிக்கு எல்லாம் சூட்டிங் வந்து விடுவார். அஞ்சரை மணிரத்தினம் என்ற பெயரையே வைத்துவிட்டன ராம்.

சிம்பு இப்படி நாசுக்காக கொடுத்த பதிலால் அடுத்து எஸ் டி ஆர் 50 இயக்கப் போகும் அஸ்வந்த் மாரிமுத்து சற்று உஷாராகி இருப்பார். மறைமுகமாக இது சிம்பு அவருக்கு கொடுத்த வார்னிங் அலர்ட்டாக கூட இருக்கலாம். இப்படி முன்னர் தனக்கு கிடைத்த அவப்பெயருக்கு சிம்பு தரப்பு நியாயத்தை தக்லைப் பட பிரமோஷனில் உடைத்து விட்டார்.