Kamal : மே மற்றும் ஜூன் மாதங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ஆறு படங்கள் வெளியாக இருக்கிறது. இன்றைய தினம் கேங்கர்ஸ் மற்றும் நாளை சுமோ ஆகிய படங்கள் தியேட்டரில் வெளியாக உள்ளது.
சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிப்பில் உருவான கேங்கர்ஸ் படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதை அடுத்து மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், விடிவி கணேஷ் ஆகியோர் நடித்திருக்கும் படம் தான் சுமோ. அடுத்ததாக ஏப்ரல் மாதத்தில் முதல் நாளே சூர்யாவின் ரெட்ரோ வெளியாக உள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ரெட்ரோ படத்திற்கும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. இதே நாளில் சுந்தர் சி மற்றும் சிம்ரன் நடிப்பில் உருவாகி இருக்கும் டூரிஸ்ட் ஃபேமிலி படமும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பெரும் எதிர்பார்ப்புடன் ரிலீஸ் ஆக உள்ள 6 படங்கள்
அடுத்ததாக மே 16ஆம் தேதி சூரி கதாநாயகனாக நடித்திருக்கும் மாமன் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்தப் படத்திற்கு போட்டியாக சந்தானம் நடிப்பில் உருவான டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வெளியாக இருக்கிறது.
டிடி ரிட்டர்ன்ஸ் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இதன் தொடர்ச்சியாக இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 23ஆம் தேதி விஜய் சேதுபதி நடிப்பில் ACE படம் வெளியாகிறது. விஜய் சேதுபதியின் மகாராஜா படம் அமோக வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு கூடுதலாக உள்ளது.
மேலும் ஜூன் முதல் வாரமான 5ஆம் தேதி கமல், சிம்பு நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான தக் லைஃப் படம் வெளியாகிறது. கமல் கடைசியாக இந்தியன் 2 படத்தில் கைவிட்ட நிலையில் இந்தப் படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார்.