மதராசி, புறநானூறு என பெரிய பெரிய ப்ராஜக்ட்டுகளை தான் சிவகார்த்திகேயன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இப்பொழுது ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் மதராசி படத்தில் நடித்து வருகிறார். அதன் பின்னர் புறநானூறு என இரண்டு வருடங்களுக்கு கடும் பிசியாக இருக்கிறார்.
சூர்யாவின் ரெட்ரோ படம் மே ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்பொழுது அந்த படத்தின் பிரமோஷன் விழா போய்க் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் படம் என்பதால் இதற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
சூர்யா இந்த படத்தில் தன்னை நிரூபித்தால் மட்டுமே அடுத்தடுத்து படங்களில் ஜொலிக்க முடியும். இதற்கு முன் நடித்த கங்குவா படம் அவருக்கு பெரும் அடியாக அமைந்தது. அதன் பின் ஹிந்தி, தெலுங்கு படங்கள் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் சூர்யா பின்னர் அதுவும் ட்ராப்பானது
இதனால் கதை தேர்வில் அனுபவமும்,யுக்தியும் வாய்ந்தவர்களை வைத்து வேலை செய்கிறார். அப்படி அவர் செலக்ட் பண்ணிய இயக்குனர் தான் கார்த்திக் சுப்புராஜ். சினிமாவில் கேரண்டியான இயக்குனராக வலம் வருகிறார் இவர்.
இப்பொழுது அவர் சிவகார்த்திகேயனுக்காக ஒன்லைன் ஸ்டோரி சொல்லி இருக்கிறார். ஆனால் சிவகார்த்திகேயன் ரெட்ரோ வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அதற்குப் பிறகு கமிட் ஆகலாம் என்று பல்ஸ் பிடித்து பார்க்கிறார். இப்படித்தான் வெங்கட் பிரபுவை கோட் படத்திற்கு பிறகு டீலில் விட்டு விட்டார்.