3 படங்களில் கொள்ளை லாபம் பார்த்த கமல்.. விட்டதை பிடித்து கஜானாவை ரொப்பிய ஆண்டவர்

1981ஆம் ஆண்டு ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ராஜாவின் பார்வை படத்தை முதன்முதலாக தயாரித்தார்கமலஹாசன். அதன் பிறகு பல லாபகரமான படங்களை தயாரித்து தமிழ் சினிமாவில் ஆளுமை மிக்க நிர்வாணமாக வலம் வந்தது.

அபூர்வ சகோதரர்கள், சத்யா, தேவர் மகன், சதிலீலாவதி, மகளிர் மட்டும் என பல ஹிட் படங்களை கொடுத்து தொடர்ந்து நல்ல தயாரிப்பு நிறுவனமாக காலூன்றியது. அதன் பிறகு சறுக்கல்களை சந்திக்கஆரம்பித்தது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த குருதிப்புனல் படத்தில் இருந்து கமலுக்கு அடி விழ ஆரம்பித்தது.

ஹேராம், மும்பை எக்ஸ்பிரஸ், தூங்காவனம், கடாரம் கொண்டான் என அடுத்தடுத்து பல தோல்வி படங்களை சந்தித்து இந்த நிறுவனம் மூடும் அளவிற்கு சென்றது. கமலின் மகள்களாகிய சுருதிஹாசன் மற்றும் அக்சரா ஹாசன் இருவரும் இந்த நிறுவனத்தை புதுப்பிக்க எவ்வளவோ போராடினார்கள்.

விக்ரம்: 2022 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் கமல் மீண்டும் பல படங்களை தயாரிக்கும் அளவிற்கு லாபம் கொடுத்தது. இந்த படத்தை120கோடிகளில் தயாரித்த ராஜ்கமல் நிறுவனம் 500 கோடி லாபம் பார்த்தது. உச்சகட்ட சந்தோஷத்தில் கமல் ஆட்டத்தை தொடங்கினார்.

அமரன் : 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 380 கோடி வசூலை கொடுத்து அவருக்கு மேலும் சந்தோஷத்தை டபுள் ஆக்கியது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த இந்த படம் கொள்ளை லாபம் பார்த்து அவரை வேறு இடத்திற்கு கொண்டு சென்றது.

தக்லைப்: 200 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது இந்த படம். இன்னும் ரிலீஸ் ஆகவில்லை ஆனால் அதற்குள் நெட்பிலிக்ஸ் இந்த படத்தை 125 கோடிகள் கொடுத்து வாங்கி விட்டது. எப்படிப் பார்த்தாலும் இந்த படம் 400 கோடி வசூல் வேட்டை ஆடிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல் மணிரத்தினம் கூட்டணி என்பதால் இப்பவே இதற்கு ஹய்ப் ஏறி உள்ளது.