Suriya: பொதுவாக பெரிய ஹீரோக்களின் படங்களுடன் லோ பட்ஜெட் படங்கள் மோதுவது என்பது குறிஞ்சி மலர் பூப்பது போன்று தான்.
அப்படித்தான் சூர்யாவின் ரெட்ரோ படத்துடன் சசிகுமார் நடித்திருக்கும் டூரிஸ்ட் ஃபேமிலி படம் ரிலீஸ் ஆக இருப்பதும்.
அதிலும் கார்த்திக் சுப்புராஜின் படம் என்பதால் ரெட்ரோவுக்கு இன்னும் அதிக வெயிட்டான எதிர்பார்ப்பு இருக்கிறது.
சபாஷ் சரியான போட்டி!
அதை தாண்டி சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி மோத இருக்கும் காரணத்தை கேட்டால் சபாஷ், சரியான போட்டி என சினிமா ரசிகர்களுக்கு தீனி போடும் விதமாக இருக்கிறது.
என்னதான் பெரிய ஹீரோ, பெரிய பட்ஜெட் என்றாலும் கதை வெயிட்டாக இருந்தால் தான் மக்களிடம் செல்லுபடி ஆகும்.
மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை என்று சொல்வார்கள். அதை சினிமாவுக்காக கதையில் கனம் இருந்தால் ரிலீசில் பயமில்லை என்று மாற்றிக் கொள்ளலாம்.
சூர்யா போன்ற டாப் ஹீரோவின் படத்துடன் மோத முடிவெடுத்து இருக்கும்போதே டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் கதைகளும் மீது படக்குழுவுக்கு இருக்கும் நம்பிக்கை தெரிகிறது.
கதையில் கனமில்லாமல் சூர்யாவை நம்பி கார்த்திக் சுப்புராஜ் களம் இறங்கி விட்டால் இது கர்ணம் தப்பினால் மரணம் என்று ஆகிவிடும்.
கங்குவா நாயகன் ரெட்ரோ மூலம் பீனிக்ஸ் பறவை போல் எழுந்து வருகிறாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.