Heera-Ajith: நடிகர் அஜித்குமார் 90ஸ் ஹீரோயின் ஹீராவை காதலித்தது பெரும்பாலும் சினிமாவை நன்கு அறிந்தவர்கள் எல்லோருக்குமே தெரியும்.
அதை தாண்டி இவர்களுக்குள் என்ன நடந்தது, ஏன் திருமணம் செய்யவில்லை என்பதெல்லாம் யாரும் தெரிந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் நேற்று பத்மபூஷன் விருது வாங்கும் அதே நேரத்தில் ஹீரா பதிவிட்ட போஸ்ட் பெரிய அளவில் வைரலாக ஆரம்பித்துவிட்டது.
எக்ஸ் காதலியின் ‘அக்லி’ பதிவு!
அஜித் குமார் என்னை காதலித்து ஏமாற்றி விட்டார், என் மீது பகிரங்கமாக பழி சுமத்தி சினிமாவை விட்டு போகும் படி செய்து விட்டார் என ஹீரா சொல்லி இருப்பது பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நடிகை ஹீரா இந்த பதிவை கடந்த ஜனவரி மாதம் எழுதி இருக்கிறார். அதில் நான் ஒரு நடிகருடன் நெருங்கிய உறவில் நீண்ட காலம் இருந்தது எல்லோருக்குமே தெரியும்.

கடைசியில் அந்த நடிகர் என்னை காதலித்து ஏமாற்றி விட்டார். ஒரு ஸ்டூடியோவுக்கு வர சொல்லி இன்னொருவரை வைத்து இந்த விஷயத்தை சொன்னார்.
நான் ரொம்பவும் கெஞ்சி, கதறி அழுது இது உண்மையா என கேட்டேன். அதற்கு நான் வேலைக்காரி மாதிரி இருக்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வேன், அப்போதுதான் அவளை யாரும் பார்க்க மாட்டார்கள், நான் விருப்பப்பட்ட மாதிரி வாழ்வேன் என சொன்னதாக ஹீரா குற்றம் சாட்டி இருக்கிறார்.

மேலும் நான் போதைப் பொருளுக்கு அடிமையானதாய் அந்த நடிகர் தவறான தகவலை பரப்பி தன்னுடைய பெயரை மக்கள் முன்னிலையில் கெடுத்து விட்டதாகவும் சொல்லியிருக்கிறார்.
மேலும் தனக்கு ஆபரேஷன் நடந்தது என அவர் சொல்வதெல்லாம் மக்களிடையே தனக்கு நல்ல பெயர் வர வேண்டும் என்பதற்காகத்தான்.
அவருடைய கஷ்ட காலங்களில் நான் இரவு பகல் பாராது அவருடன் துணையாக இருந்தேன். ஆனால் கடைசியில் என்னை நிற்கதியாக விட்டுவிட்டார் என ஹீரா சொல்லி இருக்கிறார்.

இதில் அவர் அஜித்தின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் சினிமாவில் காதலித்தது அஜித் தான் என்பதால் எல்லோரும் அவர் அஜித்தை பற்றி தான் பேசுகிறார் என உறுதி செய்து இருக்கிறார்கள்.
மேலும் நேற்று ஒரே நாளில் நிறைய பேர் அந்த பதிவை பார்க்க ஆரம்பித்ததால் ஹீராவின் அந்த பிளாக் போஸ்ட்டை பார்க்க முடியாத அளவுக்கு வெப்சைட் கிராஷ் ஆனதாகவும் சொல்லப்படுகிறது.