படப்பிடிப்பில் அஜித் ஹீராவுடன் அடிச்ச கூத்து இருக்கே.. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய பிரபல இயக்குனர்!

Ajith Kumar: உலை வாய மூடினாலும் ஊர் வாயை மூட முடியாது என்று சொல்வார்கள். அப்படித்தான் இப்போது அஜித்தின் முன்னாள் காதல் பற்றிய செய்திகள் பரவிக் கொண்டிருக்கிறது.

அஜித் ஹீராவை காதலித்ததும், அவர்கள் காதல் கைகூடாமல் போனதும் செய்தியாக அவ்வப்போது வெளியில் வருவதுண்டு.

அஜித் ஹீராவுடன் அடிச்ச கூத்து

ஆனால் அஜித்தால் தான் ஏமாற்றப்பட்டதாக ஹீரா போஸ்ட் ஒன்று போட்டிருப்பதாக வெளியான செய்தியின் மூலம் அஜித் இவ்வளவு நாள் சேர்த்து வைத்த பெயர் ஆட்டம் காணும் அளவுக்கு நடந்திருக்கிறது.

அஜித்தை வைத்து நீ வருவாய் என படத்தை இயக்கியவர் தான் ராஜகுமாரன். இவர் கொடுத்திருக்கும் பழைய பேட்டி ஒன்றை தேடி கண்டுபிடித்து வைரல் ஆக்கி வருகிறார்கள்.

அதில் அஜித் நடித்த உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தின் படப்பிடிப்புக்கு ஹீரா அடிக்கடி வருவார் என ராஜகுமாரன் சொல்லி இருக்கிறார்.

ஒரு சீன் ஓகே ஆனதும் சுற்றி இருக்கும் அத்தனை பேர் முன்னிலையில் அஜித் ஹீராவை ஓடிச் சென்று கட்டி அணைத்துக் கொண்டதாக ராஜகுமாரன் சொல்லி இருக்கிறார்.

ஏற்கனவே இந்த பிரச்சனை பற்றி கொண்டிருக்கும் போது அதில் எண்ணெய் ஊற்றுவது போல் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.