Rajinikanth: தேரை இழுத்து தெருவில் விடுவது என்று சொல்வார்கள். அப்படி ஒரு விஷயத்தை ரஜினிகாந்த்திற்கு பக்காவாக செய்துவிட்டார் லதா ரஜினிகாந்த்.
ரஜினிக்கு ஏற்கனவே அவருடைய குடும்பத்தால்தான் பிரச்சனைக்கு மேல் பிரச்சனை என அவருடைய ரசிகர்களே வருத்தப்படுவார்கள்.
வான்டடாக மாட்டும் சூப்பர் ஸ்டார்!
போதாத குறைக்கு இப்போ அவருடைய மனைவி பன்னியிருக்கும் விஷயம் இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் அமையப் போகிறது.
லதா ரஜினிகாந்த் சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசி இருக்கிறார். அதில், மனதளவில் எல்லோரும் இந்துக்களாக இருக்க வேண்டும், இந்துத்துவா பண்பாட்டை காப்பாற்ற வேண்டும்.
ஒருவர் வாழும் விதம், உடுத்தும் உடை, பேசும் மொழி போன்றவற்றை வைத்து பிரித்துப் பார்க்கக் கூடாது என்று பேசி இருக்கிறார்.
ஏற்கனவே ரஜினியை சங்கி என்று ஒரு கூட்டம் வருத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்துத்துவா பண்பாட்டை பற்றி பேசி எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றி விட்டார் ரஜினியின் காதல் மனைவி லதா.