Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனந்தி கர்ப்பமாக இருப்பதை அன்புவிடம் எப்போது சொல்வாள் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும் இருந்தது.
தற்போது மூன்றாவது நபர் ஒருவர் மூலமாக அன்புக்கு இந்த விஷயம் தெரிய வர இருக்கிறது. ஆனந்தி ஏற்கனவே பெரிய குழப்பத்துடன் அன்புவிடம் பேசுவதை தவிர்த்து வருகிறாள்.
ஆடி போகும் அன்பு!
அன்புவின் அம்மா வீட்டிற்கு வர சொல்லியும் ஆனந்தி வரவில்லை. இது அன்புவின் அம்மா மற்றும் தங்கச்சிக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.
அதே நேரத்தில் ஆனந்தியின் இந்த நிலைமையால் அவள் அன்பு விடம் இருந்து பிரிவதற்கும் முடிவெடுத்தாள். இந்த நிலையில் சௌந்தர்யாவுக்கு ஆனந்தி கர்ப்பமாக இருப்பது தெரிந்து விடுகிறது.
இதை அன்பு விடம் சொல்வதற்கு சௌந்தர்யா போகும் போது ஆனந்தி அவளை தடுத்து மொட்டை மாடிக்கு அழைத்துச் செல்கிறாள்.
அந்த இடத்தில் வைத்து தனக்கு ஏற்பட்ட அநீதியை பற்றி சௌந்தர்யாவிடம் சொல்கிறாள். சௌந்தர்யாவும் ஆனந்தியும் அழுது கொண்டே இது பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது அன்பு அந்த இடத்திற்கு வருகிறான்.
ஆனந்தியின் கர்ப்பத்தை அன்பு சௌந்தர்யா மூலம் தெரிந்து கொள்கிறான், தெரிந்த பின் என்ன மாதிரி முடிவெடுக்கிறான் எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்.