Trisha: சினிமாவில் 20 வருடங்களாக நம்பர் ஒன் நடிகையாக இருப்பது பெரிய விஷயம் இல்லை. இது த்ரிஷாவுக்கு நடந்து இருக்கிறது.
ஆனால் இதில் அவர் சந்தித்த இறங்குமுகங்களும் உண்டு. அப்படி அவர் மார்க்கெட் ஆட்டம் காணும் போதெல்லாம் கை கொடுத்து தூக்கி விட்ட 6 படங்களை பற்றி பார்க்கலாம்.
திருப்புமுனையாக அமைந்த 6 படங்கள்
பொன்னியின் செல்வன்: நயன்தாராவின் வளர்ச்சியில் திரிஷாவின் சினிமா மார்க்கெட் சுனாமியில் காணாமல் போனது போல் ஆகிவிட்டது.
கிட்டத்தட்ட பத்து வருடத்திற்கும் மேலாக திரிஷா எங்கே இருக்கிறார் என்பதை தேட கூட ஆளில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
திரிஷாவின் இந்த பத்து வருட வனவாசத்தை முடித்து வைத்தது பொன்னியின் செல்வன் படம் தான்.
மார்க்கெட் இழந்த ஹீரோயின்கள் மீண்டும் நம்பர் ஒன் இடத்திற்கு வருவது என்பது சாத்தியமே கிடையாது. ஆனால் திரிஷா ஏற்று நடித்த குந்தவை கதாபாத்திரம் அதை அவருக்கு சாத்தியப்படுத்தி காட்டியது.
லியோ: என்னதான் பொன்னியின் செல்வன் மூலம் கம் பேக் கொடுத்தாலும், முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க வித்திட்டது லியோ தான்.
கலவையான விமர்சனங்களை லியோ படம் பெற்றிருந்தாலும் இந்த படத்திற்கு பிறகு தான் அஜித், சூர்யா போன்ற நம்பர் ஒன் நடிகர்களின் படங்களில் கமிட் ஆக ஆரம்பித்தார் திரிஷா.
சாமி: மௌனம் பேசியதே, மனசெல்லாம், எனக்கு 20 உனக்கு 18 என வளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்களில் அடுத்தடுத்து நடித்துக் கொண்டிருந்தார் திரிஷா.
முன்னணி நடிகர்களின் படங்களில் அவர் கமிட் ஆவதற்கு பிள்ளையார் சுழி போட்டது விக்ரமின் சாமி படம். இந்த படத்திற்கு பிறகு தான் பெரிய ஹீரோக்கள் தங்களுடைய படங்களில் த்ரிஷாவை நடிக்க வைத்தார்கள்.
கில்லி: நடிகர் விஜய்யுடன் திரிஷா இணைந்து நடித்த கில்லி படத்தின் வெற்றி அவருடைய சினிமா கேரியரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
அப்போதைய இளைஞர்கள் தனலட்சுமி என த்ரிஷாவை கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். அந்த சமயத்தில் தான் த்ரிஷா இளைஞர்களின் கனவு கன்னியாகவும் ஆனது.
விண்ணை தாண்டி வருவாயா: அஜித்துடன் நடித்த கிரீடம் படத்திற்கு பிறகு த்ரிஷாவுக்கு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக வெற்றி படம் என்பதே இல்லாமல் இருந்தது.
அப்போது கை கொடுத்து தூக்கி விட்ட படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த படத்தின் ஜெஸ்ஸி கேரக்டர் திரிஷா மீண்டும் இளைஞர்களின் கனவு கன்னியாக மாற்றியது.
96: 2014ஆம் ஆண்டு ரிலீசான என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக த்ரிஷாவுக்கு வெற்றிப் படங்கள் என்று எதுவுமே இல்லை.
பெரிய ஹீரோக்களின் படங்கள் என்று இல்லாமல் அரண்மனை, நாயகி போன்ற படங்களில் தான் நடித்துக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் திரிஷாவை மீண்டும் ட்ரெண்ட் ஆக்கியது 96 படம் தான். இந்த படத்தில் அவர் ஏற்ற நடித்த ஜானு கேரக்டர் தமிழ் சினிமாவில் என்றும் மறக்க முடியாதது.