சிங்கப்பெண்ணில் ஆனந்தி கர்ப்பமாக இருப்பதை வைத்து மிரட்டும் அந்த நபர்.. அன்புவை நோக்கி நகரும் கதைக்களம்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. ஆனந்தி அன்பு வீட்டில் எல்லாரிடமும் எந்த பழக்க வழக்கத்தால் நல்ல பெயர் வாங்கினாலும் அதை இழந்து விட்டு நிற்கிறாள்.

அன்பின் அம்மாள் லலிதா மற்றும் தங்கை யாழினிக்கு ஆனந்தி ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என பெரிய சந்தேகம் வருகிறது.

மேலும் ஆனந்தி அன்பு வை கம்பெனியில் நேரில் பார்த்தும் பேச மறுக்கிறாள். அன்புவுக்கு இது பெரிய மன வருத்தத்தை கொடுக்கிறது.

அன்புவை நோக்கி நகரும் கதைக்களம்

ஆனந்திக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளத்தான் சௌந்தர்யாவை அந்த ஹாஸ்டலுக்கு அனுப்பினான்.

அன்பு நினைத்த மாதிரியே சௌந்தர்யா ஆனந்திக்கு என்ன பிரச்சனை என்பதை கண்டுபிடித்து வருகிறாள். இதை அன்பு விடம் சொல்ல போகும்போது ஆனந்தி அவளை தடுத்து விடுகிறாள்.

மேலும் அன்பு விடம் இதை சொல்லக்கூடாது என்றும் சொல்கிறாள். சௌந்தர்யா ஆனந்தியிடம் நீ எந்த மாதிரி விஷயத்தை வேண்டுமானாலும் மற்றவர்களிடம் மறைத்து கொள்ளலாம்.

கர்ப்பமாக இருப்பதை எப்படி மறைப்பாய். இன்னும் இரண்டு மாதம் போனால் நீ நினைத்தாலும் அதை மறைக்க முடியாது என்று மிரட்டுகிறாள்.

அந்த நேரத்தில் அன்பு மொட்டை மாடிக்கு வந்து விடுகிறான். அன்பு இவர்கள் இருவரும் பேசுவதை கேட்டு விடுகிறானா, அல்லது சௌந்தர்யா அன்பு விடம் சொல்கிறாளா என்பது இன்று தான் தெரியும்.

ஆனந்தி கர்ப்பம் அன்புக்கு தெரிய வரும் பொழுது கண்டிப்பாக அவளுக்கு உதவி தான் செய்வான்.

ஆனந்தியை இந்த நிலைமைக்கு ஆளாக்கியது யார் அல்லது ஆனந்தி உண்மையாகவே கர்ப்பமாக இருக்கிறாளா என்பதை அன்பு கண்டுபிடிப்பது தான் அடுத்த கட்ட கதை நகர்வாக இருக்கும்.