மீண்டும் லைக்காவுடன் இணையும் கமல்.. மீட்டெடுப்பாரா விண்வெளி நாயகன்.?

Kamal: லைக்கா தயாரிப்பு நிறுவனம் வந்த வேகத்தில் பெரிய பட்ஜெட்டில் டாப் ஹீரோக்களை வைத்து படங்களை எடுத்தனர். ஆனால் இப்போது நிறுவனம் நஷ்டத்தில் இருக்கிறது.

அதிலும் பெரிய அளவில் எதிர்பார்த்த இந்தியன் 2 பல வருடங்கள் இழுத்தடித்து ஒரு வழியாக ரிலீஸ் ஆனது. ஆனால் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.

அதேபோல் லால் சலாம் படமும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. வேட்டையன் கூட எதிர்பார்த்த அளவுக்கு வசூல் பெறவில்லை.

இப்படி அடுத்தடுத்த அடிகளால் லைக்கா துவண்டு போனது. அதனால் ரஜினி, கமல் ஆகியோருடன் இந்நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது.

மீண்டும் லைக்காவுடன் இணையும் கமல்

அதில் சூப்பர் ஸ்டார் லைக்காவுடன் இணைய சம்மதித்திருக்கிறார். அதேபோல் கமல் அடுத்ததாக லைக்கா தயாரிப்பில் நடிக்க இருப்பதை உறுதி செய்துள்ளார்.

அதன்படி சண்டை இயக்குனர்களான அன்பறிவு கமலை வைத்து படம் இயக்க இருக்கின்றனர். இதன் அறிவிப்பு ஏற்கனவே வந்தது.

அதை அடுத்து இந்த ப்ராஜெக்ட் தான் தொடங்க இருக்கிறது. லைக்கா தயாரிக்கும் இப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் திரில்லர் கதையம்சத்தை கொண்டது.

நிச்சயம் இது ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி இருக்கும். அதே போல் லைக்கா நிறுவனமும் நஷ்டத்தை சரி செய்து மீண்டு விடும் என்கின்றனர்.