18 வருடங்களா அதிக வெற்றியை ருசித்த 5 ஐபிஎல் அணிகள்.. தொடர் தோல்விக்கு பின்னால் சிஎஸ்கேவின் ரெக்கார்டு

2008 ஆம் ஆண்டு தொடங்கியது இந்த ஐபிஎல் போட்டிகள். வெற்றிகரமாக 18 வது ஆண்டு இந்த தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதுந்த 18 ஆண்டுகளும் பல முன்னணி வீரர்கள் அணி மாறாமல் இதில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் புது அணிகளை தவிர 18 ஆண்டுகள் விளையாடி அதிக வெற்றியை ருசித்த முதல் 5 அணிகள். விளையாடிய போட்டியளை வைத்து கணக்கிடப்பட்ட வெற்றி பட்டியல்.

பஞ்சாப் கிங்ஸ்: 18 ஆண்டுகளும் இந்த அணியினர் தொடர்ந்து விளையாடி வருகிறார்கள். பல வீரர்கள், கேப்டன்கள் மாறினாலும் இந்த தொடரில் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மொத்தமா 257 போட்டிகள் விளையாடி116 தோல்விகளும், 136 வெற்றிகளையும் பெற்றுள்ளனர். ஒரு விடைதெரியாத போட்டி மற்றும் 3 டை போட்டிகளையும் சந்தித்து 5வது இடத்தில் இருக்கின்றனர்.

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா தலைமையின் கீழ் விளையாடி வரும் மும்பை அணி இதுவரை 272 போட்டிகளில் விளையாடி 149 வெற்றிகளும், 119 தோல்விகளும் அடைந்துள்ளனர். 2 டை போட்டிகளையும் இவர்கள் சந்தித்துள்ளனர். 18 ஆண்டுகளாக விளையாடி வரும் இவர்கள் நான்காவது இடத்தில் இருக்கிறார்கள்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: இவர்கள் மொத்தமாக 263 போட்டிகள் விளையாடியுள்ளனர் அதில் 135 வெற்றிகளும் 122 தோல்விகளும் சந்தித்துள்ளனர் ஒரே ஒரு போட்டி மட்டும் டை யாக முடிந்துள்ளது. 2 முடிவில்லா போட்டிகளும் இருக்கிறது. இவர்கள் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்கள்

டெல்லி கேப்பிட்டல்: 262 போட்டிகள் விளையாடி 117 வெற்றியும் 138 தோல்விகளையும் சந்தித்துள்ளனர். 2 முடிவில்லா போட்டிகளையும் 4 டை போட்டிகளையும் இதுவரை சந்தித்துள்ளனர். இவர்கள் இந்த லிஸ்டில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ்: இந்த தொடரில் இதுவரை மிகவும் மோசமாக செயல்பட்டு கொண்டிருக்கும் சென்னை அணி நம்பர் ஒன் வெற்றி ரெக்கார்டை வைத்துள்ளது. இவர்கள் மொத்தமா 250 போட்டிகளில் விளையாடி 140 வெற்றியும் 107 தோல்வியும் சந்தித்துள்ளனர். 2 போட்டிகள் மற்றும் முடிவில்லாததாய் அமைந்துள்ளது.