Sundari serial Gabrilla: சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சுந்தரி சீரியல் மூலம் கதாநாயகியாக பிரபலமான கேபிரில்லாவுக்கு இன்று குழந்தை பிறந்திருக்கிறது. இந்த சந்தோஷத்தை ரசிகர்களுடன் கொண்டாட வேண்டும் என்ற காரணத்திற்காக பிஞ்சுக் குழந்தையின் கைகளை தன் உள்ளங்களில் வைத்திருப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு ஒரு பதிவையும் போட்டிருக்கிறார்.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதாவது கொரோனா களத்தில் டிக் டாக் மூலம் ஆக அறிமுகமான கேப்ரில்லா பல வீடியோக்களை போட்டு வந்தார். அந்த சமயத்தில் தான் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலே வெளியேறிவிட்டார்.
ஆனாலும் துவண்டு போகாமல் இருந்த கேபிரில்லா தொடர்ந்து வீடியோக்களை இன்ஸ்டா மற்றும் youtube இல் போஸ்ட் பண்ணி வந்தார். அந்த சமயத்தில் தான் இவருக்கு சன் டிவியில் மூலம் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் முதல் வாய்ப்பை கதாநாயகியாக கிடைத்து பட்டி தொட்டி எல்லாம் சுந்தரி சீரியலை பிரபலமாகி வெற்றி அடைவதற்கு இவருடைய நடிப்பும் மிக முக்கிய காரணமாக இருந்தது.
அப்படிப்பட்ட கேபிரில்லாவிற்கு திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கும் வாய்ப்பே கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு கிடைத்ததிட்ட 1000 எபிசோடுகளை வெற்றிகரமாக கொடுத்தார். மேலும் இந்த சீரியல் முடித்த கையுடன் கர்ப்பம் என்பது அறிவித்து தொடர்ந்து போட்டோ சூட் நடத்தி சோசியல் மீடியாவில் வெளியிட்டு வந்தார்.

அப்படிப்பட்ட இவருக்கு இன்று பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அத்துடன் கேப்ரில்லாவின் ஸ்டைல் எப்பொழுதுமே ஒரு கதை சொல்லி ஒரு தத்துவத்தை கொடுப்பதுதான். அந்த வகையில் குழந்தை பிறந்த கையோடு உருக்கமாக போட்ட பதிவு என்னவென்றால் “மகளை உனது அழுகை எனக்கு வலிக்கும், ஆனாலும் என்னுடைய நிம்மதிக்கு நீ மருந்தாகி விட்டாய்.
இவ்வுலகம் உனக்கானது மகளே.. அதனால் என்னுடைய அடிமனதிலிருந்து நான் உனக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று சொல்லி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லையென்றால் எனக்கு சுகப்பிரவசம் பிறப்பதற்கு சாத்தியமில்லை. அவர்களுக்கும் என்னுடைய நன்றி என சொல்லி குழந்தை பிறந்த மகிழ்ச்சியை அனைவருக்கும் தெரியப்படுத்தி இருக்கிறார்.