Time Travel 5 Movies : சமீபகாலமாக டைம் ட்ராவல் வைத்து நிறைய படங்கள் வெளியாகி வருகிறது. அதில் இப்போதும் மனசில் நிற்கும்படி நல்ல வரவேற்பு பெற்ற ஐந்து படங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
முதலாவதாக விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான இன்று நேற்று நாளை படம் டைம் டிராவலிங் வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை இரண்டு முறையாவது பார்த்தால் தான் படத்தின் கதை ரசிகர்களுக்கு புரியும்.
அடுத்ததாக சூர்யாவின் நடிப்பில் உருவான படம் தான் 24. விக்ரம் குமார் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் நித்யா மேனன், சமந்தா போன்றோர் நடித்து இருந்தனர். இந்த படமும் ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
டைம் ட்ராவல் வைத்து எடுக்கப்பட்ட ஐந்து படங்கள்
மூன்றாவதாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தின் வெளியான படம் தான் மார்க் ஆண்டனி. விஷால், எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான இந்த படம் டைம் டிராவல் வைத்து எடுக்கப்பட்டு ஹிட் அடித்தது.
கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், அனகா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் தான் டிக்கிலோனா. இந்த படம் அறிவியல் சார்ந்த நகைச்சுவை படமாக எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்திலும் இயக்குனர் டைம் ட்ராவல்லை பயன்படுத்தி இருப்பார்.
சிம்புவுக்கு கம்பேக் கொடுத்த படம் தான் மாநாடு. வெங்கட் பிரபு இந்த படத்தை இயக்கியிருந்தார். அரசியல் களத்தில் பரபரப்பு கூட்டும் கதைகளத்துடன் டைம் ட்ராவல் வைத்து மாநாடு படம் எடுக்கப்பட்டிருந்தது.