Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய வெளியாகி இருக்கிறது. ஜான் ஏறினால் முழம் சறுக்கும் என்ற கதையாக ஆனந்தியின் நிலைமை தகிடுதத்தம் ஆடிக் கொண்டிருக்கிறது.
என்ன நடந்தது என்று தெரியாமல் ஏற்பட்ட கர்ப்பம், அதை அன்புவிடமிருந்து மறைப்பது, குழந்தைக்கு அப்பா யார் என தெரிந்து கொள்ள மகேஷின் உதவியை நாடுவது என ஆனந்தியின் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்ட இந்த நேரத்தில் மகேஷ் கொடுத்த ஆதாரத்தையும் தவற விடுகிறாள் ஆனந்தி.
மித்ரா கையில் சிக்கிய ஆனந்தியின் குடுமி
ஆனந்தியின் மொத்த குடுமியை பிடித்து ஆட்ட மித்ரா காத்துக் கொண்டிருக்கிறாள். கம்பெனியின் 25வது ஆண்டு விழா கொண்டாட்ட வீடியோ இருக்கும் பென் ட்ரைவ் சௌந்தர்யா மித்ராவிடம் கொடுக்கிறாள்.
அன்பு அம்மா ஏற்பாடு செய்திருக்கும் பூஜையில் கூட கலந்து கொள்ளாமல் ஆனந்தி அந்த வீடியோவை பார்க்க தயாராகும் தருணத்தில் தான் லேப்டாப்பில் அந்த வீடியோ இல்லை என்பது தெரிகிறது.
மேலும் சௌந்தர்யா அந்த வீடியோ அடங்கி இருக்கும் பென் டிரைவை மித்ராவிடம் கொடுத்து விட்டதாக சொல்கிறாள். இதனால் ஆனந்திக்கு மித்ரா மீது சந்தேகம் வருகிறது.
அதே நேரத்தில் ஏற்பாடு செய்த பூஜைக்கு வராத காரணத்தால் அன்புவின் அம்மா ஆனந்தி மீது நம்பிக்கை இழப்பது போலவும் காட்டப்பட்டிருக்கிறது.
ஒரு பக்கம் அன்புவை விட்டு விலக முடிவெடுத்திருக்கும் நேரத்தில், தன்னுடைய கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை ஆனந்தி கண்டுபிடிக்கிறாளா என பொறுத்திருந்து பார்க்கலாம்.