உதயநிதி மட்டும் ஓகே சொல்லட்டும்!. தலைகீழாய் நின்னு தண்ணி குடிக்க தயாரான சந்தானம், என்ன பாஸ்?

Santhanam: ஏடாகூடமான வேலையை செய்பவர்களை எச்சரிக்கை தலைகீழா நின்னு தண்ணி குடிக்கணும் என்று நினைக்கிறியே என்ற சொலவடை சொல்வதுண்டு.

அந்த வீர சாகசத்துக்கு தற்போது சந்தானம் தயாராகிக் கொண்டிருக்கிறார். ஹீரோ கனவில் எல்லாம் தவிடு பொடியாக அடுத்து மற்றொரு திட்டத்துடன் களமிறங்கி இருக்கிறார்.

அந்தத் திட்டத்திற்கு அவருக்கு உறுதுணையாக இருக்கப் போகிறவர்கள் தான் அவருடைய நெருங்கிய நண்பர்களான உதயநிதி, ஆர்யா போன்றவர்கள் எல்லாம்.

வான்டடாக சிக்கும் சந்தானம்

பாதாளத்திற்கு சென்ற சந்தானத்தின் மார்க்கெட்டை திருப்பிக் கொண்டு வருபவர்களுக்கு நன்றி கடனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் அல்லவா.

அதனால் தான் 2026 சட்டமன்ற தேர்தலில் உதயநிதிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறேன் என களமிறங்குகிறார் சந்தானம்.

ஏற்கனவே திமுகவுக்கு பிரச்சாரம் செய்த பிறகு மார்க்கெட்டின் உச்சியில் இருந்த வடிவேலு பத்து வருடம் வனவாசம் போனது எல்லோருக்கும் தெரியும்.

மார்க்கெட்டே இல்லாமல் அல்லாடி கொண்டிருக்கும் சந்தானம் இப்படி ஒரு வாக்குறுதி கொடுத்திருப்பது தான் பெரிய ஆச்சரியம். நடிகர் விஜய் தேர்தல் களம் காணும் நேரத்தில் தனக்கு ஆதரவாக நடிகர்களை களம் இறக்க முடிவு செய்துவிட்டார் போல துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.