ஒரு வாரம் விடுமுறை கிடைத்தால் கூட தனி விமானத்தில் பாரீஸிற்கு சுற்றுலா சென்று விடுகிறார் நயன்தாரா. சமீபத்தில் கூட சென்னை வெயில் தாங்க முடியாமல் அங்கே போய் விட்டு இந்தியா திரும்பியுள்ளார். இப்பொழுது மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஐசரி கணேசன் மகள் பிரீத்தா திருமணம் நடைபெற்றது. ரஜினி முதல் கமல் வரை அனைவரும் கலந்து கொண்டனர். அது போக அரசியல் தலைவர்களும் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர் . சினிமாவிலிருந்து சில முக்கியமான பிரபலங்கள் வரவில்லை.
ஐசரி கணேஷ் தயாரிப்பில் நடித்து மிகவும் நெருக்கமான சிம்பு, தனுஷ், நயன்தாரா இவர்கள் மூவரும் கூட திருமணத்திற்கு வரவில்லை .சிம்பு மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இருவருக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் இருந்து மனக்கசப்பு இருந்து வருகிறது. இதனால் கோர்ட் வரை சென்றுவிட்டார் ஐசரி கணேஷ்.
தனுஷ் கல்யாணத்திற்கு வரவில்லை என்றால் அவர் குபேரன் பட சூட்டிங்கில் இருக்கிறார். கல்யாணத்தன்று தான் இறுதி நாள் படப்பிடிப்பாம். அதனால் தனுஷ் விழாவில் கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. கூப்பிடுகிற தூரத்தில் இருக்கும் நயன்தாரா கூட கல்யாணத்திற்கு வரவில்லை.
ஐசரி கணேஷ் நேரில் சென்று நயன்தாராவிற்கு பத்திரிக்கை வைக்கவில்லையாம், இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஒரு காலத்தில் நயன்தாரா எங்கு சென்றாலும் ஐசரி கணேஷ் விமானத்தை வாங்கிக் கொண்டுதான் செல்வாராம். அது மட்டும் இன்றி மாமா உங்கள் விமானம் வேண்டும் என உரிமையோடு கேட்பாராம். இப்படி இருக்கும் நயன்தாரா கல்யாணத்திற்கு வரவில்லை.