சிங்கப்பெண்ணில் ஆனந்திக்கு கிடைத்த ஆதாரத்தை அழிக்கும் 3வது நபர்.. மிரண்டு போன மித்ரா!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அன்பு விடம் எந்த உண்மையையும் சொல்லாமல் தன்னுடைய கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க ஆனந்தி முழு மூச்சுடன் இறங்கி இருக்கிறாள்.

மிரண்டு போன மித்ரா!

அவளுடைய முயற்சிக்கு கை மேல் பலனாக பார்த்தி நடந்த வீடியோ அவள் கைகளில் கிடைத்துவிட்டது. தான் குடிக்கும் கூல்ட்ரிங்க்ஸில் முன்னாள் ஊழியர் ஒருவர் மருந்து போன்ற பொருளை கலப்பது அந்த வீடியோவில் தெரிகிறது.

சௌந்தர்யாவின் உதவியுடன் அந்த நபரை குறிப்பிட்ட இடத்திற்கு ஆனந்தி வர வைக்கிறாள்.

கூல்ட்ரிங்ஸ் பாட்டிலில் என்ன கலந்தாய் என அவளை அடித்து உதைத்து கேட்கும் நேரத்தில் கை நிறைய மண்ணை அள்ளி ஆனந்தியின் கண்களில் போட்டுவிட்டு ஓடிவிடுகிறான்.

அதே நேரத்தில் அவன் ஓடிக்கொண்டிருக்கும் ரோட்டில் இன்னொரு கார் வந்து நிற்கிறது. இதன் மூலம் இந்த ஆதாரத்தை காப்பாற்றவோ அல்லது அழிக்கவோ மித்ராவை தாண்டி வேறு யாரோ இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

இதன் உள் புதிதாக வரும் வில்லன் யார் என்பது இனி தான் தெரியும். ஏற்கனவே ஆனந்தியிடம் ஆதாரம் கிடைத்து விட்டதால் மித்ரா ஆடிப் போய் இருக்கிறாள். இந்த ஆதாரத்தை எப்படி ஒண்ணும் இல்லாமல் ஆக்குகிறாள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.