Thug Life: கமல், சிம்பு ஆகியோர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது தக் லைஃப் படம். இந்தப் படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. மேலும் வருகின்ற மே 17 டிரைலர் வெளியிட முடிவு செய்து இருக்கின்றனர்.
இந்நிலையில் கமல், சிம்பு போன்ற பிரபலங்கள் படத்தின் பிரமோஷனை இப்போதே ஆரம்பித்து விட்டனர். அவர்கள் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கும் வீடியோக்களை பார்க்க முடிகிறது. அந்த வகையில் கமல் கொடுத்த பேட்டி தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் தக் லைஃப் படத்தின் கதை தன்னுடையது என்பதை கூறியிருக்கிறார். அதாவது அமர் ஹைன் என்ற டைட்டிலில் கதை வைத்திருந்தாராம். அதாவது படத்தின் கதாநாயகன் இறந்து விட்டதாக எல்லோரும் நம்பப்படும் நிலையில் அவர் உயிருடன் தான் இருக்கிறார் என்பது தான் கதை.
கமலின் கதையில் தக் லைஃப் படம்
இதை மணிரத்னம் தனது பாணியில் கிளைமாக்ஸ் மாற்றி அமைத்து தக் லைஃப் என்று எடுத்துள்ளதாக கூறியுள்ளார். படத்தின் கதையை மொத்தமாக ஒன் லைன் ஸ்டோரியில் கமல் சொன்னது பலருக்கும் அதிர்ச்சி அளித்திருக்கிறது.
பொதுவாகவே ரிலீசுக்கு முன்பு படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல்களை வெளியில் சொல்ல மாட்டார்கள். ஆனால் கமல் இப்படி வெளிப்படையாக போட்டு உடைத்திருக்கிறார். இதில் ஏதாவது கண்டிப்பாக சூட்சுமம் இருக்கும்.
ஏனென்றால் எதிர்பார்ப்பை மீறி படத்தில் ஏதோ உள்ளதால் தான் கமல் இவ்வாறு கதையை கூறியிருக்கிறார். நாயகன் படத்தை போல் மணிரத்னம், கமல் கூட்டணி மாபெரும் வெற்றியை தக் லைஃப் படத்தில் கொடுக்கிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.