சிம்பு, கமல விடுங்க.. ‘தக் லைப்’ படத்துல இந்த 4 பேருதான் ரொம்ப முக்கியமாம்

தக் லைப் படத்தின் விளம்பர வேலைகள் படுவேகமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் சிலம்பரசன், கமலஹாசன் இவர்கள் இரண்டு பேரை தவிர மற்ற 4 முக்கியமான நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்களாம்.

மணிரத்னம், படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்தவுடன் யூடியூப்பில் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இன்னமும் இருந்து வருகிறது. 24 மணி நேரத்தில் 20 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது தக் லைப் ட்ரெய்லர்.

இந்த படத்தில் சிம்பு தான் ஹீரோ கமலஹாசனுக்கு கூட குறைவான காட்சிகள் தான் இருக்கிறதாம். சிம்பு வர காட்சிகள் கலகலப்பாகவும் கமலஹாசன் வரும் காட்சிகள் மிகவும் டெரராக இருக்குமாம்.

மேலும் இவர்கள் இரண்டு பேர்கள் தவிர மற்ற முக்கியமான கதாபாத்திரங்களும் படத்தின் ட்விஸ்ட்க்கு காரணமாக இருக்கிறது. அவர்கள்தான் ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், நாசர், ஜோஜூ ஜார்ஜ்.

இந்த நான்கு பேரும் படத்தின் முக்கியமான கேரக்டரில் நடித்து இருக்கிறார்கள். நாசர் கொடூர வில்லனாகவும் அசோக் செல்வன் போலீசாக கலக்கி இருக்கிறாராம்.

பொதுவாக கமலஹாசன் படத்தில் அவருக்கு மட்டும் தான் முக்கியத்துவம் இருக்கும் ஆனால் இந்த படத்தின் இயக்குனர் மணிரத்தினம் என்பதால் அவர் ஒன்றும் சொல்லவில்லை. அதற்குமேல் இந்த படத்திற்கு கமலஹாசனும் பணம் போட்டுள்ளார்.

அதனால் கம்முனு படத்தை முடித்தோமா, பணத்தை எடுத்தோமா என்று கமலஹாசன் அமைதியாக இருக்கிறாராம்.