Thug Life : அண்மையில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தக் லைஃப் படத்தின் டிரைலர் வெளியாகி பல மர்ம முடிச்சுகளை போட்டுள்ளது. அப்பா மகன் போல இருக்கும் கமல் மற்றும் சிம்பு இருவரும் கழுத்தைப் பிடித்துக் கொள்ளும் அளவுக்கு சண்டை போடுகிறார்கள்.
மேலும் கமல் ஏற்கனவே இந்த படத்தின் கதையை கூறிவிட்டார். அதாவது இறந்ததாக நம்பப்படும் ஒருவர் உயிருடன் இருப்பது தான் தக் லைஃப். இந்த படத்தின் கதையை அமர் ஹை என்ற தலைப்பில் எழுதி இருந்தாராம்.
அதை மணிரத்தினம் தனது பாணியில் சில மாற்றங்கள் செய்து எடுத்துள்ளதாக கூறியிருந்தார். இந்த கதையில் அமர் கதாபாத்திரத்தில் சிம்பு தான் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது கமல் இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
தக் லைஃப் படத்தின் மணிரத்னம் வைத்த டுவிஸ்ட்
அதில் வயதான கதாபாத்திரத்தில் இருப்பவர் ரங்கராய சக்திவேல் நாயக்கர் மற்றும் இளம் கதாபாத்திரத்தில் இருப்பவர் அமர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் மணிரத்னம் தனது படங்களில் இரட்டை வேடங்கள் எடுப்பதில் அதிகம் ஆர்வம் காட்ட மாட்டார்.
இருவர் படத்தில் மட்டும் ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரம் இரட்டை வேடத்தில் எடுக்கப்பட்டது. கதைக்கு அது மிக முக்கியம் என்பதால் அவ்வாறு எடுத்திருந்தார். இப்போது சிம்பு அமர் இல்லை என்பது கிட்டத்தட்ட உறுதியானாலும் வேற ஏதாவது டுவிஸ்டை மணிரத்தினம் வைத்திருக்கக்கூடும்.
மேலும் பகத் பாசில், ரோஹித் போன்ற நடிகர்களின் கதாபாத்திரத்தை சஸ்பென்ஸ் ஆக வைத்திருக்கிறார்கள். ஆகையால் எதிர்பார்ப்பை மீறி தக் லைஃப் படத்தில் அமர் கதாபாத்திரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.