Sivakarthikeyan : சிவகார்த்திகேயனின் வளர்ச்சி இப்போது தான் ஏறுமுகத்தை சந்தித்து வந்தது. யார் கண் பட்டதோ திடீரென பெரிய சிக்கலில் மாட்டியிருக்கிறார். அதாவது இப்போது சிவகார்த்திகேயன் மதராசி மற்றும் பராசக்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
பராசக்தி படத்தை Dawn பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நிறுவனர் ஆகாஷ் பிரபாகரன் அமலாக்கத்துறை வளையத்திற்குள் சிக்கி உள்ளார். மேலும் 500 கோடிக்கு மேல் முதலீட்டில் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களின் படத்தை தயாரிக்கிறார்.
இவ்வளவு பெரும் தொகை எவ்வாறு அவரிடம் உள்ளது என ரைடு சென்றிருக்கிறது. இந்த சூழலில் ஆகாஷ் பிரபாகரன் தலைமறைவு ஆகிவிட்டார். இதனால் பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்ள இருப்பது சிவகார்த்திகேயன் தான் என்று கூறப்படுகிறது.
பெரிய சிக்கலில் மாட்டியிருக்கும் சிவகார்த்திகேயன்
ஏனென்றால் பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனுக்கு 70 கோடி சம்பளமாக பேசப்பட்டிருக்கிறதாம். இந்நிலையில் இசிஆரில் சிவகார்த்திகேயனின் வீட்டை இடித்துவிட்டு புதிய வீடு 70 கோடி மதிப்பில் கட்ட இருக்கிறாராம்.
இதை கட்ட இருப்பது டான் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நெருக்கமான நபர் தான். அவர் ஏன் உங்களுக்கு வீடு கட்டி தர வேண்டும் என்று ED வளையத்திற்குள் சிவகார்த்திகேயன் சிக்க வாய்ப்பு இருக்கிறது.
சாதாரணமாக சம்பளத்தை மட்டும் சிவகார்த்திகேயன் வாங்கி இருந்தால் இவ்வளவு பிரச்சனையில் சிக்கி இருக்க வாய்ப்பு இருந்திருக்காது. ஆனால் வேலியில் போற ஓணானை வேட்டியில் விட்ட கதையாக வீடு கட்ட இறங்கி பிரச்சனையில் சிக்கி உள்ளார்.