48வது பிறந்தநாளை கொண்டாடும் கார்த்தி.. அசர வைக்கும் சொத்து மதிப்பு

Karthi : சிவகுமாரின் வாரிசாக சினிமாவில் நுழைந்த கார்த்தி கதாநாயகனாக ஜொலித்தார். அவருடைய முதல் படமான பருத்திவீரன் படமே பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. இதுதொடர்ந்து பல ஹிட் படங்கள் கார்த்தி கொடுத்திருக்கிறார்.

ஆனால் சமீபகாலமாக ஜப்பான், மெய்யழகன் என தொடர் தோல்வி படங்களை கொடுத்து வந்தார். இப்போது சர்தார் 2 படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

இதுதவிர லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள கைதி 2 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இன்று தனது 48வது பிறந்தநாளை கார்த்தி கொண்டாடுகிறார். அவர் ஒரு படத்திற்கு 15 முதல் 18 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.

கார்த்தியின் சொத்து மதிப்பு

மேலும் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். தனது அண்ணன் சூர்யா நடத்தி வரும் அகரம் பவுண்டேஷனுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். இது தவிர விவசாயிகளுக்காக உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அவரது சொத்து மதிப்பு 100 கோடியை தாண்டி இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் அடுத்தடுத்து பார்ட் 2 படங்களில் நடித்து வருவதால் கண்டிப்பாக கார்த்தி இந்த வருடம் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பொருளாளராகவும் கார்த்தி பதவியில் இருந்து வருகிறார். இன்று கார்த்தியின் பிறந்தநாளுக்கு அவரது ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.