மீண்டும் இணையும் தக் லைஃப் கூட்டணி.. சிம்பு காட்டில் பேய் மழை

Simbu : சிம்பு இப்போது தக் லைஃப் படத்தில் நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாகவே கமல் மற்றும் சிம்பு சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இத்தனை வருடம் கழித்து தான் கமலுடன் இணையும் வாய்ப்பு சிம்புவுக்கு கிடைத்திருக்கிறது.

அதுவும் கமலை எதிர்த்து நிற்கும் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை மணிரத்னம் இயக்கியுள்ள நிலையில் வருகின்ற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அடுத்ததாக மணிரத்னம் நவீன் பொலிஷெட்டியை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால் இதை மணிரத்னம் மறுத்துவிட்டார். இதை அடுத்து சிம்பு படத்தை தான் மீண்டும் மணிரத்னம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே செக்கச் சிவந்த வானம் மற்றும் தக் லைஃப் ஆகிய படங்களில் மணிரத்னம் டைரக்ஷனில் சிம்பு நடித்திருக்கிறார்.

மீண்டும் இணைய உள்ள தக் லைஃப் கூட்டணி

ஆனால் இந்த படங்களில் பல ஹீரோக்கள் சப்ஜெக்ட்டாக இருந்தது. ஆனால் இந்த முறை சிம்புவை மட்டும் ஹீரோவாக வைத்து மணிரத்னம் எடுக்க உள்ளாராம். இந்த படம் முழுக்க முழுக்க காதல் கலந்த சப்ஜெக்ட்டாக இருக்க உள்ளது.

மேலும் சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஏஸ் படத்தில் கதாநாயகியாக ருக்மணி நடித்திருந்தார். அவர் தான் இந்த படத்தில் சிம்புக்கு ஜோடியாக இருக்கிறார். இப்படத்தை லைக்கா தயாரிக்க இருக்கிறது

சிம்புவின் 49 வது படத்தின் படப்பிடிப்பு இப்போது தாமதம் ஆக்கிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பிரபாகரன் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இதனால் இப்போது மணிரத்னம் படத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →