காரியவாதியாக தந்திரமாய் விளையாடும் சிவகார்த்திகேயன்.. மனதிற்குள் எஸ் கே வளர்த்து வரும் ஆசை

ஹீரோக்கள் கையில் தான் இன்றைய சினிமா இருக்கிறது. அவர்கள் டேட் கொடுத்தால் மட்டுமே நீங்கள் இயக்குனர், தயாரிப்பாளர்கள். இதை நன்றாக புரிந்து கொண்டவர் சிவகார்த்திகேயன். இப்பொழுது அவர் வேறு மாதிரியான ஆட்டத்தை கையில் எடுத்துள்ளார்.

இயக்குனர், தயாரிப்பாளர் யார் என்பதை முடிவெடுக்கும் இடத்தில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படி விஜய், அஜித் என அடுத்த இடத்தில் இருக்கும் எஸ் கே விற்கு முதன்மை ஹிரோவாகும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

ஒரு பக்கம் விஜய் ஜனநாயகனோடு தன்னுடைய கேரியரை முடித்துக் கொண்டார். மறுபக்கம் அஜித் கார் பந்தயத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே கோட் படத்தில், என்னுடைய வேலையை நீ பார்த்துக்கொள் என்ற வசனத்தின் மூலம் சிவாவை தன்னுடைய இடத்திற்கு பாதி கொண்டு வந்துவிட்டார் விஜய்.

இப்பொழுது விஜய் மற்றும் எஸ்கே வின் படங்கள் ஒன்றாக வெளிவர இருக்கிறது. இதுதான் கடும் பேசு பொருளாக மாறி வருகிறது. அரசியல் வட்டாரத்தில் விஜய்யின் ஜனநாயகன் படத்தை எஸ் கே வின் பராசக்தியை வைத்து காலி பண்ண நினைக்கிறார்கள் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது.

சிவகார்த்திகேயன் நினைத்திருந்தால் விஜய் என் மீது மிகுந்த மரியாதையும், அன்பும் வைத்திருக்கிறார். என் படத்தை வைத்து அவர் படத்தை காலி பண்ணும் திட்டத்தை அரங்கேற்றாதீர்கள் என்று சொல்லி நிறுத்தி இருக்கலாம். ஆனால் சிவாவும் இதுதான் கடைசி சான்ஸ என விஜய்யை முந்த திட்டம் போடுகிறார்.

thenmozhi

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →