June First Week Release Movies : ஜூன் முதல் வாரமே மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உள்ள படங்கள் வெளியாக இருக்கிறது. ஆகையால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவுக்கு என்னென்ன படங்கள் வெளியாகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிம்பு ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கிறது தக் லைஃப் படம். இந்த படம் விசுவாசம் மற்றும் பழிவாங்கும் படலாம் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. தக் லைஃப் படம் வருகின்ற ஜூன் 5ஆம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.
தருண் மன்சுகானி இயக்கத்தில் ஹவுஸ்ஃபுல் 5 படம் உருவாகி இருக்கிறது. அக்ஷய் குமார், ரித்தேஷ் தேஷ்முக், சஞ்சய் போன்றோர் நடித்திருக்கின்றனர். நகைச்சுவை கலந்த திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூன் 6 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
ரோஹித் படகி இயக்கத்தில் யுவ ராஜ்குமார், சம்பதா ஹுலிவானா மற்றும் அதுல் குல்கர்னி ஆகியோர் நடிப்பில் எக்கா படம் உருவாகி இருக்கிறது. ஒரு கமர்சியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வருகின்ற ஜூன் 6ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
ஜூன் முதல் வாரம் வெளியாகும் 6 படங்கள்
வெஸ் ஆண்டர்சன் இயக்கத்தில் ஃபீனீசியன் திட்டம் என்ற படம் உருவாகி இருக்கிறது. இதில் பெனிசியோ டெல் டோரோ, டாம் ஹாங்க்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் ஜூன் 6-ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர்.
மெட்ராஸ் மேட்டினி படமும் ஜூன் 6 தான் வெளியாக இருக்கிறது. சாதாரண வாழ்க்கை நடந்தும் குடும்பத்தில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக இந்த படம் கொண்டுள்ளது. இந்த படத்தில் சத்யராஜ், காளி வெங்கட் மற்றும் ரோஷினி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
டிஸ்னி டாம் மற்றும் நந்து ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கிறது காவல் தினம். இந்த படத்தில் மூத்த காவல் அதிகாரி ஒரு வழக்கை தற்கொலை என நினைக்கும் போது அதில் சந்தேகங்கள் எழுகிறது. அதை விசாரிக்கும் போது பல திருப்பங்கள் வரும் நிலையில் எழுப்பப்பட்ட உண்மைகள் வெளிப்படுகிறது.