1000 கோடி வசூல் செய்தும் 50 கோடி கடனா.? கல்லாப்பெட்டி சிங்காரம் கமலை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை

கமல்-மணிரத்தினம் கூட்டணியில் Thuglife எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அரைச்ச மாவையே அரைச்சு புளிச்சு போன கதையை வைத்து வண்டி ஓட்டுவது இனி செல்லாது, கேங்ஸ்டர் கதையை நிறுத்தினால் மட்டுமே 2026 இல் கமலுக்கு ஓட்டு போடுவோம் என ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து வருகிறார்.

இது ஒரு புறம் இருக்க கமல் சமீபத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தனக்கு 50 கோடி வரை கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அசையும் சொத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 59.60 கோடி, அசையா சொத்தின் மதிப்பு 245 கோடியை தாண்டும் என அந்த வேட்பு மனு சொத்து விவரத்தில் தெரிவித்துள்ளார்.

இதைப் பார்த்த ப்ளூ சட்டை மாறன் போத்திஸ் விளம்பரம், பிக் பாஸ் சீசன் 5 வரை கல்லாகட்டி இருப்பீங்க! இது போக கல்கி பார்ட் 1 & பார்ட் 2 இரண்டு படங்களின் சம்பளம்.

இந்தியன் 2 & இந்தியன் 3 ஆகிய படங்களின் சம்பளம் மற்றும் வசூல். இதைத் தாண்டி தயாரிப்பாளராக விக்ரம், அமரன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறீர்கள். Thuglife படத்தின் வியாபாரம் மட்டும் போட்ட காச எடுத்தாச்சு என்பது தான் உண்மை.

எப்படி பார்த்தாலும் minima-மா 1000 கோடியாவது கல்லா கட்டியிருப்பீங்க, அப்புறம் எப்படி 50 கோடி கடனில் இருக்கிறதா சொல்றீங்க என்பது போன்ற பதிவை X தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது social media-வில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

Thuglife படத்தின் புக்கிங் படிப்படியாக குறைந்து வருவதால் ஸ்கிரீன்கள் குறைக்கப்படலாம். இந்த வாரம் வெளிவந்துள்ள பரமசிவன் பாத்திமா, மெட்ராஸ் மேட்னி டைம் போன்ற புது படங்களுக்குவாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →