ஹவுஸ் ஃபுல் ஆகியும், வெறிச்சோடி போன தியேட்டர்.. ஒரே வரியில் சோலி முடிந்த தக் லைஃப்

மணிரத்தினம்-கமல்-STR கூட்டணியில் பிரம்மாண்டமாக எதிர்பார்க்கப்பட்ட தக் லைஃப் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை. முதல் நாள் வசூலை விட அடுத்தடுத்த நாட்களில் ஸ்கிரீன்கள் குறைந்து அடி வாங்கியது. இந்த வார புது படங்களும் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புக்கிங் ஆனாலும் கூட தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்பட்டதாம். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் முக்கியமான ஒரே காரணம் படம் அடல்ட் கன்டென்ட் என்ற விமர்சனம் வெளிவந்ததால் குடும்பங்கள் கொண்டாடும் படமாக தக் லைஃப் பார்க்கப்படவில்லை

ஏற்கனவே செக்க சிவந்த வானம், மணிரத்தினத்தின் பழைய படங்களில் உள்ள காட்சிகள் என பல கலவையில் தான் உருவாகியுள்ளது இந்த தக் லைஃப். அரைத்த மாவையே அரைத்து இருப்பதால் தியேட்டருக்கு முதல் நாள் சென்ற ரசிகர்களுக்கே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

அதிலும் யாரும் எதிர்பார்க்காத அளவில் மணிரத்தினத்தின் படத்தில் இப்படி ஒரு கதாபாத்திரமா என்பது போன்று த்ரிஷாவை காட்டியுள்ளனர். முதல் பாதியில் கமல் திரிஷாவை ரெட் லைட் ஏரியாவில் இருந்து அழைத்துச் சென்று கீப்பாக வைத்துக் கொள்வார்.  

ஆனால் சிம்புவுக்கு த்ரிஷா மீது இருந்த காதலால் இரண்டாம் பாதியில் கமலின் இடத்தை பிடிக்கும் STR திரிஷாவையும் சேர்த்து மிரட்டி தன்னுடன் மனைவி போல் வைத்துக் கொள்கிறார். இப்படி மாறி மாறி கை மாறிய த்ரிஷா ஒரு கட்டத்தில் வாழ்க்கை வெறுத்துப் போய் புலம்பி தவிப்பார்.

த்ரிஷா மீது அவருக்கே ஒரு வெறுப்பு வந்துவிடும் கடைசியில் ஒரு பாம் ப்ளாஸ்டில் இறந்து விடுகிறார். இப்படி போன்ற கதாபாத்திரத்தால் கதையில் அடல்ட் கன்டென்ட் ஜாஸ்தியாக இருப்பதாக விமர்சனங்கள் வெளிவந்து மொத்த வசூலையும் சோலி முடித்து விட்டது.

இந்தியன்-2, தக் லைஃப் கமலுக்கு பெரும் தோல்வியை கொடுத்தது மட்டுமல்லாமல் மணிரத்தினத்திற்கும் இது பெரும் அடி. இதனால் மணிரத்தினம் சொந்த தயாரிப்பில் புதுமுகங்களை வைத்து  அடுத்த ஒரு படத்தை இயக்குவதற்கு தயாராகி வருகிறார். 

கமலும் அடுத்த பட ரிலீஸ் இல் ஒட்டுமொத்த கவனத்தையும் செலுத்தி வருகிறார். சிம்பு தனக்கான கதாபாத்திரத்தை கனகச்சிதமாக செய்ததால் சற்று தப்பித்து விட்டார் என்றே கூற வேண்டும் அடுத்து வெற்றிமாறன் கூட்டணியில் ஒரு கேங்ஸ்டர் படத்தில் இணைய உள்ளார்.