சிங்கப்பெண்ணில் ஆனந்திக்கு எதிராய் ஒன்று சேரும் கூட்டணி.. கடைசி நம்பிக்கையாய் கிடைத்த ஆதாரம்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இந்த ப்ரொமோ அன்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தான் கொடுத்திருக்கிறது.

ஆனந்தி தனக்கு ஏற்பட்ட பிரச்சனையை அன்புவிடம் சொல்லாமல் அவனை ஒதுக்க ஆரம்பித்ததிலிருந்தே அன்பு சம்பந்தப்பட்ட காட்சிகள் சீரியலில் குறைந்து போனது.

போதாத குறைக்கு தற்போது அன்புக்கு தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பது போல் காட்டப்படுகிறது.

ஆனந்திக்கு எதிராய் ஒன்று சேரும் கூட்டணி

மேலும் அன்புவை பார்க்க வந்த ஆனந்தியை அன்புவின் அம்மா பார்க்கவிடாமல் தடுக்கிறார். இப்போதைக்கு சிங்க பெண்ணே சீரியலில் கதாநாயகி ரோலில் இருந்து வில்லி ரோலுக்கு ஆனந்தி மாறி வருகிறாள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனந்தி எதனால் அன்புவை வெறுக்கிறாள் என்பதை தெரிந்து கொள்ள அவளுடன் இருந்தவர்களே மொத்தமா கூட்டணி போட்டு அவளுக்கு எதிராக திரும்புகிறார்கள். அவள் தனி ஒரு ஆளாக தனக்கு ஏற்பட்ட பிரச்சனையை சமாளிக்கிறேன் என்ற பெயரில் சொதப்பி கொண்டிருக்கிறாள்.

தற்போதைக்கு கடைசி ஆயுதமாக ஆனந்தி கையில் கிடைத்திருப்பது மித்ராவின் செயின் தான். இந்த செயினை வைத்து மித்ராவை பின் தொடர்ந்து அந்த நாளில் தனக்கு என்ன நடந்தது, தன்னுடைய குழந்தைக்கு அப்பா யார் என கண்டுபிடிக்கிறாளா என பொறுத்திருந்து பார்க்கலாம்.