தொலைக்காட்சி

எதிர் நீச்சலில் ஆதி குணசேகரனை எதிர்த்து பார்கவியை திருமணம் செய்து கொள்ளும் தர்ஷன். ஆதி குணசேகரன் எடுக்கப்போகும் அடுத்த முடிவு என்ன?

By Vijay · 16 ஜூன் 2025 · Updated 16 ஜூன் 2025
Darshan will marry Bhargavi against Adhi Gunasekaran in the backstroke. What will Adhi Gunasekaran decide next?

Sun Tv : சன் டிவியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில். தர்ஷன் நன்றாக தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்தவுடன் அம்மா ஈஸ்வரியை கட்டியணைத்துக் கொள்கிறான். படிப்பின் அருமையை தர்ஷன் புரிந்து கொண்டான் என ஈஸ்வரி உணர்கிறார். அந்த சமயம் பார்க்க பார்க்கவியிடம் இருந்து அழைப்பு வருகிறது.

பார்கவி ஈஸ்வரியிடம் தானும் தனது அப்பாவும் ஊரை விட்டு கிளம்புவதாக கூறினார். எக்காரணத்தைக் கொண்டும் இந்த ஊரு பக்கம் திரும்ப வர மாட்டோம் என்றும் கூறுகிறார். இதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தர்ஷனின் முகம் மாறுகிறது. உடனே புறப்பட்டு வீட்டிற்கு வருகிறான் தர்ஷன். சமைத்துக் கொண்டிருக்கும் நந்தினி, ஜனனி அவர்களிடம் கேட்கிறான்.

உடனே அவர்கள் வீட்டில் உள்ளே இருப்பதால் இருப்பதாக கூறினார்கள். ஏன் எதற்கு என்று கேட்கிறார்கள், அப்பாவிடம் நான் பேச வேண்டியது ஒன்று இருக்கிறது, என்று தர்ஷன் கூறிக்கொண்டு வேகமாக ஆதி குணசேகரனை பார்க்க செல்கிறான். வீட்டில் உள்ள பெண்களுக்கும் ஒன்றும் புரியவில்லை.

ஆதி குணசேகரனை எதிர்த்து திருமணம்

வேகமாக விரைந்து ஆதிகுணசேகரனை பார்க்க செல்லும் தர்ஷன், எனக்கு அறிவுக்கரசி தங்கை அன்புடன் திருமணம் வேண்டாம் என்றும் நான் பார்க்கவியை காதலித்து வருவதாகவும் கூற போகிறார். ஆதி குணசேகரன் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

திரும்பவும் பெண்கள் கூட்டணியுடன் தர்ஷன் ஆதி குணசேகரன் எதிர்த்து பார்க்கவியை திருமணம் செய்து கொள்வாரா அல்லது படிப்பு தான் முக்கியம் எனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என்று தன் அப்பாவிடம் கூறப்போகிறாரா?

இதெல்லாம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க ஆதி குணசேகரன் தனது தம்பிகளான கதிர் மற்றும் ஞானத்தை தனியாக அழைத்து நீங்களும் சொந்த தொழிலை தொடங்குங்கள் என மனமாற்றம் செய்து கொண்டிருக்கிறார். ஆகமொத்தம் பெண்களையும் தொழிலில் ஈடுபடுத்தி விட்டு தன் தம்பிகளையும் தொழில் தொடங்க சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஆக மொத்தம் ஆதி குணசேகரின் திட்டம் பெண்களை ஆதரிப்பது போல ஆதரித்து. தனது தம்பிகளையும் தொழில் தொடங்க திட்டம் போட்டு கொடுத்து, நேரடியாக பெண்களிடம் மோதாமல்.தன் தம்பிகளை விட்டு பெண்களிடம் மறைமுகமாக மோதலாம் என சதி திட்டம் திட்டுகிறார் என வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

தர்ஷனின் திருமணம், படிப்பு மற்றும் தம்பிகள் மற்றும் தம்பிகளின் மனைவிகளின் மோதல், இதுவே இந்த வார கதை என தெரிகிறது.