உஷார்.. உஷார்.. கமல், சூர்யா, அஜித்தை காலி செய்ய சதித்திட்டம் நடக்கிறது

எல்லா நேரத்திலும் எல்லா படமும் கைகொடுக்கும் என்று சொல்ல முடியாது. இது பெரிய நடிகர்கள் சிறிய நடிகர்கள் என்றல்லாமல் கதை நல்லா இருந்தால் படம் ஓடப்போகிறது. மக்கள் கதையைத்தான் எதிர்பார்ப்பார்கள்.

திடீரென சிறிய நடிகர்களை உச்சத்திற்கு கொண்டு சென்ற படங்களும் இருக்கின்றன. திடீரென பெரிய நடிகர்களை வீழ்த்திவிட்ட படங்களும் இருக்கின்றன.

சினிமாவை பார்ப்பது மட்டும்தான் மக்களின் வேலை ஆனால் நடிகர்களோ தரமான கதைகளை தேர்வு செய்து நடிப்பது என்பது நடிகர்களின் பொறுப்பு சில நேரங்களில் அவர்களுக்கு நேரம் நன்றாக இருந்தாலே கதை இல்லாமல் இருந்தால் கூட ஒரு சில படங்கள் ஹிட்டடித்து விடுகின்றன. சில நேரங்களில் நல்ல கதை இருந்தாலும் நல்ல நடிகர்கள் இல்லாமல் படம் தோல்வியை சந்திக்கிறது.

ரஜினிகாந்த் அவர்கள் நடித்த வேட்டையன் படம் பெரிய அளவில் மக்களால் கொண்டாடப்படவில்லை. நல்ல கதைக்களம் தான் ஆனால் மக்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடுத்து நடிகர் சூர்யா அவர்கள் நடித்த கங்குவா படமும் மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அதனால் தோல்வியை சந்தித்தது.

இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமார் நடித்த விடாமுயற்சி, நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ மற்றும் தற்போது ரிலீசாகி ரிலீஸ் ஆவதற்கு முன்பு பெருசாக பேசப்பட்டாலும் ரிலீஸ் ஆனதற்கு அப்புறம் அவ்வளவாக தூக்கிக் கொண்டாடப்படவில்லை என்றே தான் “தக் லைப்” படத்தை கூறிய ஆக வேண்டும்.

“தக் லைப்” படத்தை பொறுத்தவரை பேர் போன நடிகர்களுக்கு பஞ்சமில்லை என தான் கூற வேண்டும். இருந்தாலும் அது மக்கள் மத்தியில் கொண்டாடப்படவில்லை.

பெரிய ஹீரோக்களை காலி செய்ய சதித்திட்டம் நடக்கிறது…

ஆனால் இதனை எதார்த்தமாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் அனைத்து திரைப்படமும் வெற்றியடையும் என்று கூற முடியாது. அதே சமயம் அனைத்து திரைப்படமும் தோல்வியடையும் எனவும் கூற முடியாது.

ஆனால் பெரிய நடிகர்களை சதி செய்து வீழ்த்தி விட்டார்கள் என தனஞ்சயன் அவர்கள் கூறியதாக “ப்ளூ சட்டை மாறன்” அவரது பதிவில் பதிவிட்டு இருக்கிறார்.

அதாவது பெரிய ஹீரோக்களை காலி செய்ய திட்டமிட்ட சதி நடப்பதாகவும். இந்த சதியை வீழ்த்த 10000 பேரைக் கொண்ட ஒரு குழுவை நிர்ணயித்து சோசியல் மீடியாவில் பெரிய ஹீரோக்களின் படம் வரும் போது அதற்கு ஆதரவாக செயல்பட வைக்க வேண்டும் . இதன் மூலம் சதிக்காரர்களை வீழ்த்தி விடலாம் என இவர் தெரிவித்துள்ளார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →