Thuglife போனாலும் ஆஸ்கரில் இருந்து கமலுக்கு வந்த அழைப்பு.. வியந்து பார்க்கும் திரையுலகம்

Kamalhasan : நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தமிழ் சினிமா உலகிலேயே நன்கு அறிந்த ஒருவர். இவர் சிறு வயதில் இருந்து நடிப்பில் ஆர்வம் காட்டிக்கொண்டு நடித்து வருகிறார். நடிகர்திலகம் சிவாஜிக்கு அடுத்து நடிப்பில் பேர்போன நடிகர் என்றால் அது கமல்ஹாசன் அவர்கள் தான். இவர் நடிப்பில் வெளிவந்த பெரும்பாலான படங்கள் பெரிய ஹிட் கொடுத்திருக்கின்றன.

களத்தூர் கண்ணம்மாவில் ஆரம்பித்து Thuglife வரை இவர் நடித்த அனைத்து படங்களில் பெரும்பாலான படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளன. நடிப்பில் மட்டுமல்லாமல் பாடல் பாடுவது , கதை எழுதுவது, நடனம், பாடல் வரிகள் எழுதுவது, அரசியல் என பன்முகத் தன்மை கொண்ட ஒரு நடிகராக தான் வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

இவரது நடிப்பில் இறுதியாக வெளிவந்த இந்தியன் 2 , Thuglife ஆகிய படங்கள் தோல்வியை சந்தித்து இருந்தாலும் அதனால் சிறிதும் மனம் தளராமல் அடுத்தடுத்து என ஓடிக் கொண்டிருக்கும் ஒரு முற்போக்கு சிந்தனையாளர் என்றே கூறலாம். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மற்ற சில மொழிகளிலும் நடித்து தனக்கான ஒரு அங்கீகாரத்தை அடைந்துள்ளார் என்றே கூறலாம் அதனால் இவரை உலக நாயகன் என்று அழைக்கிறோம்.

இப்போது வரிசையாக இரண்டு படங்கள் தோல்வியில் முடிந்து இருந்தாலும் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருந்ததாலும், தமிழ் திரையுலகில் கமல்ஹாசன் அவர்களின் மீது ஒரு தனி பார்வை இருந்து வந்தது. இதிலிருந்து மீண்டு வந்து விடுவாரா என்ற கேலி கிண்டல்களும் ஒரு பக்கம் இருந்து கொண்டிருக்க அதெல்லாம் கண்டுகொள்ளாமல் தன் போக்கில் சென்று கொண்டிருந்தார் கமல்ஹாசன்.

நமக்கான வேலையை நாம் செய்து கொண்டிருந்தால் அதற்கான அங்கீகாரத்தை கடவுள் கொடுப்பார் எனக் கூறும் விதத்தில் இன்னும் ஒரு படி மேலாக சென்று கமல்ஹாசன் அவர்களை, அனைவரும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் கடவுள் என்றே கூறலாம். ஆமாம் தற்போது வெளிவந்துள்ள செய்தி தமிழ் திரை உலகிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்கரில் இருந்து கமலுக்கு வந்த அழைப்பு..

மதிப்புமிக்க “தி அகாடமி”-யிலிருந்து, அந்த அகாடெமியில் சேர அழைப்பு வந்துள்ளது. இந்த அழைப்பு உலகம் முழுவதிலும் 531 பேருக்கு அனுப்பப்பட்டுள்ளது. கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா, தயாரிப்பாளர் பயல் கபாடியா, பாடகி- நடிகை அரியனா கிராண்டே ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அழைப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் இவர்கள் ஆஸ்கர் விருதுகளுக்கு வாக்களிக்க முடியும். இவ்வாறாக இந்த குழுவின் மூலம் ஆஸ்கர் விருது வாக்கெடுப்பு நடத்தி நபர்கள் தேர்வு செய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மென்மேலும் புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருக்கும் கமல்ஹாசன் அவர்களை தமிழ் திரையுலகம் வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. இது அத்தனை புகழுக்கும், அத்தனை பெயருக்கும் கமல்ஹாசன் தகுதியான ஒரு நபர் என்பது யோசிக்காமல் அனைவராலும் ஏற்றுக்கொள்ள கூடிய விஷயம்.