தொடர் கேலிக்குள்ளான கமல், சூர்யா.. கலைக்கு தோல்வி கிடையாது என்பதை காட்டிய காலம், இத கவனிச்சீங்களா?

Kamal Haasan: காய்ச்ச மரம் கல்லடி படும் என்று சொல்வார்கள். அப்படிப்பட்டவர்கள் தான் நடிகர்கள் கமல் மற்றும் சூர்யா. ஹீரோ என்ற இமேஜை தாண்டி தாங்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் நின்று பேச வேண்டும் என்பதற்காக கடின உழைப்பை போடக்கூடியவர்கள்.

ஆனால் கடந்த சில வருடங்களாக இவர்கள் இணையத்தில் சந்திக்காத கேலி கிண்டல் இல்லை என்று சொல்லலாம். சூர்யா பொருத்தவரைக்கும் அவருடைய உயரத்திலிருந்து அவர் சார்ந்திருக்கும் குடும்பம் வரை எல்லாவற்றையும் கேலி கிண்டல் ஆக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

தொடர் கேலிக்குள்ளான கமல், சூர்யா

கமலஹாசன் என்ற ஒரு நடிகரை விக்ரம் படத்தில் கொண்டாடி தீர்த்தார்கள் இணையவாசிகள். அதே நேரத்தில் இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் படங்கள் சரியாக போகாத காரணத்தினால் மீண்டும் அவரை தொடர்ந்து கேலி செய்ய ஆரம்பித்தார்கள்.

தங்களுக்கு பிடித்த ஹீரோக்களை பெரிய அளவில் காட்ட வேண்டும் என்பதற்காக மற்ற நடிகர்களை எவ்வளவு மோசமாக சித்தரிக்க முடியுமோ அவ்வளவு மோசமாக சித்தரிக்கிறார்கள்.

என்னதான் கேலி கிண்டல் என வீம்புக்கு செய்யப்பட்டாலும் கமல் மற்றும் சூர்யாவின் கடின உழைப்புக்கு தற்போது பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

உலக அளவில் உச்ச விருதாக பார்க்கப்படுவது ஆஸ்கர். இந்த ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் உறுப்பினர்களாக கலந்து கொள்ள கடந்த வருடம் சூர்யாவுக்கு அழைப்பு வந்தது.

அதேபோன்று இந்த வருடம் கமலுக்கு அழைப்பு வந்திருக்கிறது. இவர்கள் நடித்த படங்கள் பொருளாதார ரீதியாக வெற்றியை தராவிட்டாலும் இவர்களுடைய உழைப்புக்கு இந்த வெற்றி கிடைத்திருக்கிறது.