Serial: விஜய் டிவியில் புது சீரியல்கள் அடுத்தடுத்து வருவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. அதனால் பழைய சீரியல்கள் ஒவ்வொன்றாக ஓரங்கட்டி வருகிறார்கள். அந்த வகையில் பொன்னி, நீ நான் காதல் சீரியல் முடிவடைந்ததை தொடர்ந்து சக்திவேல் மற்றும் தங்கமகள் போன்ற சீரியல்களும் முடிவுக்கு வர தயாராகிவிட்டது.
இந்த சூழ்நிலையில் தங்கமகள் சீரியல் மூலம் மக்களுக்கு பரிச்சயமான மயில்சாமியின் மகன், யுவன் மயில்சாமி நடிப்பால் அனைவரையும் கவர்ந்து விட்டார். இவருக்கு கிடைத்த முதல் வாய்ப்பு தான் விஜய் டிவியில் முன்னணி ஹீரோவாக தங்கமயில் சீரியலில் நடித்துக் கொண்டு வருகிறார். அப்படிப்பட்ட இவருக்கு புதுசாக கிடைத்திருக்கும் வாய்ப்பு என்னவென்றால் சீரியலுக்கு அடுத்தபடியாக வெப் சீரியஸ்க்கு தாவி இருக்கிறார்.
ஜியோ ஹாட் ஸ்டார் இல் ஒளிபரப்பாக போகும் வெப் தொடரில் யுவன் மயில்சாமி கதாநாயகனாக அடி எடுத்து வைத்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஜீ தமிழ் சீரியலில் அறிமுகமான படிணி குமார் கமிட் ஆகி இருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் ஹார்ட் பீட்(heart beat) என்ற வெப் சீரியஸ் வெளியானது. இதை தயாரித்த டெல்லி பேக்டரி நிறுவனம் தான் யுவன் மயில்சாமி மற்றும் படிணி குமாருக்கு அடுத்த வாய்ப்பையும் கொடுத்து இருக்கிறது.
திறமை இருந்தால் அடுத்தடுத்து வாய்ப்புகள் வரும் என்பதற்கு உதாரணமாக அப்பாவின் பெயரை எங்கேயும் பயன்படுத்தாமல் விடாமுயற்சியால் சின்னத்திரைக்குள் நுழைந்து பிரபலமான சூழ்நிலையில் அடுத்த கட்ட வெற்றியாக வெப் சீரியஸ்க்கு யுவன் மயில்சாமி நுழைந்து இருக்கிறார். இதன் மூலம் அடுத்தடுத்து வெள்ளி திரையிலும் வாய்ப்புகளை பெற்று அப்பாவின் பெயரை நிலை நிறுத்துவார்.