முதல்வராகும் கனவில் திரிஷா.. ஜெயலலிதா பாணியை கையிலெடுத்தது ஏன்?

Trisha : திரிஷா ஜெயலலிதா பாணியை பின்பற்றி தமிழக முதல்வராக ஆசைப்படுவதாக சமீப காலமாக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது. திரிஷாவின் சமூக ஊடக செயல்பாடுகள் மற்றும் குறிப்பாக விஜய்யின் பிறந்த நாள் அன்று வெளியிட்ட புகைப்படங்கள் பேசுபொருளாக மாறியது.

அதோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் அருப்புக்கோட்டையில் உள்ள விநாயகர் கோயிலுக்கு ஆறு லட்சம் மதிப்புள்ள இயந்திர யானையை நன்கொடையாக வழங்கினார். இதே போல் தான் ஜெயலலிதாவும் கோயில்களுக்கு யானைகளை வழங்குவார் என்ற விமர்சனம் வந்துள்ளது.

அதாவது சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த ஜெயலலிதா எம்ஜிஆர் வழிகாட்டுதலின் பெயரில் சினிமாவில் இருந்து அரசியலுக்கு நுழைந்தார். மேலும் ஆறு முறை முதலமைச்சர் பதவியிலும் அமர்ந்தார். அதேபோல் இப்போது திரிஷாவிற்கு 42 வயதாகிறது. 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

ஜெயலலிதா பாணியை பின்பற்றிய திரிஷா

ஜெயலலிதாவின் அரசியல் எழுச்சிக்கு முன்னர் அவரது சினிமா அந்தஸ்தை பிரதிபலிக்கும் வகையில் தான் த்ரிஷாவின் சினிமா வாழ்க்கையும் இருக்கிறது. நடுவில் தமிழ் சினிமாவில் இருந்த விலகி இருந்த த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

விஜய்யின் பிறந்தநாள் அன்று திரிஷா வெளியிட்ட புகைப்படத்தால் அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் சக நடிகர் மற்றும் நட்பின் காரணமாகத்தான் திரிஷா இந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்க வாய்ப்பிருக்கிறது.

மேலும் ஜெயலலிதா பாணியில் கோயிலுக்கு யானையை நன்கொடையாக கொடுத்ததாகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அவர் விலங்குகள் நல ஆர்வாளர் என்பதால் தான் இவ்வாறு செய்திருக்கிறார். செல்லப்பிராணிகள் மீது அதிக அன்பு வைக்கும் திரிஷா நிறைய நாய்கள் வளர்த்து வருகிறார்.

சமீபத்தில் அவரது நாய் இறந்ததற்கு கூட சோகமான பதிவு போட்டிருந்தார். மேலும் சினிமாவில் வந்த புதிதில் ஊடகங்களில் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பது என்னுடைய ஆசை என்று கூறியிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் ஜெயலலிதா தான் என்னுடைய ரோல் மாடல் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படத்தில் நடிக்க திரிஷா ஆர்வம் செய்திகள் வெளியானது. ஆகையால் த்ரிஷா அரசியலுக்கு வருவாரா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.