சிவகார்த்திகேயனின் அடுத்த பட அப்டேட்.. புளியன்கொம்பையே புடிச்சிட்டாரே!

Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயனுக்கு முதற்கட்ட ஹீரோவாக முன்னேறி வருவதற்கு கால நேரம் கைகூடி வருகிறது போல. அதனால் தான் அவருக்கு அடுத்தடுத்த படங்கள் வெற்றிக்கு வித்திடுவதுவாகவே அமைந்துள்ளது. டாக்டர் படத்தில் ஆரம்பித்த இந்த பயணம் அமரன் படத்தின் மூலம் உச்சத்தை தொட்டுவிட்டது.

இதை தொடர்ந்து தற்போது பராசக்தி மற்றும் மதராசி இரண்டுமே சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி விடும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. பராசக்தி படத்திற்கு சிவகார்த்திகேயன் பல விருதுகளை வாரிக் குவிக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

புளியன்கொம்பையே புடிச்சிட்டாரே!

இந்த நிலையில் தான் புடிச்சாலும் புளியங்கொம்பை புடிக்கணும் என்பதற்கு ஏற்ப புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. படம் பொருளாதார அளவில் வெற்றி அடைகிறதோ அல்லது தோல்வியடைகிறதோ நடிக்கும் கேரக்டர் பல வருடங்களுக்கு நின்று பேச வேண்டும்.

அப்படி ஒரு கேரக்டரை கொடுக்கும் எல்லா திறமையும் புஷ்கர் காயத்ரிக்கு இருக்கிறது. இதற்கு விக்ரம் வேதா படமே ஒரு பெரிய சாட்சி. மதராசி திரைப்படத்தை தொடர்ந்து இந்த கூட்டணியில் உருவாகும் படத்தின் அப்டேட் வருவதற்கு அதிக அளவு வாய்ப்பு இருக்கிறது.