அப்பா பட பாடலை ரீமேக் செய்து ஹிட்டடித்த 3 வாரிசுகள்

தற்போதைய பீட், பாஸ், பாப் கலவையில் பழைய ஹிட் பாடல்கள் மெருகேற்றுவது சினிமா உலகில் ஹாட் ட்ரெண்ட்! அதிலும் அப்பா நடித்த சூப்பர் ஹிட் ஸாங்-ஐ, மகன் ஸ்டைலிஷா ரீமேக் பண்ணி அதே ரேஞ்சில் ஹிட்டடிக்கிறார் என்றால், அது ஒரு நேர்த்தியான ஒரு சிறப்பு அம்சம் இப்போது அப்படி ட்ரெண்ட் செட்டர்ஸ் ஆன 3 ஸ்டார் களையும் பார்ப்போம்.

1986-ல் டி.ராஜேந்தர் எழுதி இசையமைத்த ‘என் ஆசை மைதிலியே’ பாடல், தனது மன்மதன் படத்தில் சிம்பு ரீமேக் செய்து சூப்பர்ஹிட் அடித்தார். யுவன் சங்கர் ராஜாவின் இசையில், இந்த ரீமேக் இன்றைய ரசிகர்களிடையே cult status-க்கு சென்றுள்ளது.

1988ல் வெளியான இது நம்ம ஆளு படத்தில் பாக்யராஜ் இசையமைத்து, எஸ்.ஜானகி பாடிய ‘நான் ஆளான தாமரை’ என்ற பாடல் பெரும் ஹிட் ஆனது. இந்த பாடல், பாக்யராஜ் இயக்கத்தில் அவரது மகன் சாந்தனு நடிப்பில் சித்து பிளஸ் 2 படத்தில் ரீமேக் செய்யப்பட்டது.

1983ல் தியாகராஜன் நடிப்பில் மற்றும் இளையராஜா இசையில் வந்த மலையூர் மம்பட்டியான் படத்தின் பாடல்கள் பெரும் ஹிட் ஆனது, குறிப்பாக ‘சின்னப்பொண்ணு சேல’ மற்றும் ‘காட்டு வழி போற பொண்ணே’.

2011ல் அதே படத்தை தியாகராஜன், மகன் பிரஷாந்த் ரீமேக் செய்தார். தமன் இசையில் பழைய ஹிட் பாடல்களும் மீண்டும் உயிர்ப்பெற்றது. அந்த ஹிட் சாங் சமீபத்திய டூரிஸ்ட் ஃபேமிலி படத்திலும் இடம் பெற்று nostalgiya கிளப்பியது.

இவை எல்லாம்தமிழ்ப் பாடல்களின் வெற்றிகரமான ரீமேக் பயணத்தை பிரதிபலிக்கின்றன. பழைய இசை புதுமையோடு கலந்த போது, nostalgiya-க்கும் புதிய தலைமுறைக்கும் பாலமாக மாறியுள்ளது.