சிவகார்த்திகேயனுக்கு ஆட்டம் காட்டும் பிரதீப் ரங்கநாதன்.. வியாபார தந்திரத்தை காட்டிய நெட் பிளிக்ஸ்

2019ஆம் ஆண்டு கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். எப்படியாவது ஒரு ஹிட் வேண்டுமென எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜெயம் ரவிக்கு அந்த படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. அந்த படத்திற்குப் பிறகு இயக்குனர் பிரதீப்பிற்கு இன்றுவரை ஏறுமுகம்தான்.

அதன் பின் 2022ஆம் ஆண்டு லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்தார். இந்த படத்தை இயக்கி நடித்து, இதை தயாரித்த ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு 100 கோடிகளுக்கு மேல் வசூலையும் பெற்று கொடுத்தார். இப்படி ஒரு நடிகராகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.

பின்னர் இந்த வருடம் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்தார். இந்த படமும் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. 40 கோடியில் எடுக்கப்பட்ட இந்த படம் 150 கோடிகள் வசூலை வாரி குவித்து மீண்டும் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கொள்ளை லாபம் கொடுத்தது.

தொடர்ந்து பிரதீப் படங்கள் நல்ல லாபகரமாக அமைந்து வருவதால் அடுத்து இவர் நடித்துக் கொண்டிருக்கும் “Dude” படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 25 கோடிகளுக்கு வாங்கி உள்ளது. ஏற்கனவே பிரதீப், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் “LIK” என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இதில் “Dude” படம் அக்டோபர் மாதம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. புதுமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இதை இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இப்படி இந்த படத்தை அதிக விலை கொடுத்து வாங்கிய நெட்பிளிக்ஸ், சிவகார்த்திகேயன் நடித்து வரும் மதராசி படத்தை 23 கோடிகள் கொடுத்து தான் வாங்கியிருக்கிறார்கள்.