மோகன்லாலால் நின்னுபோன சிவகார்த்திகேயன் படம்.. நேரம் பார்த்து வெங்கட் பிரபு அள்ளிய அதிர்ஷ்டம்

பராசக்தி, மதராசி என சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த ப்ராஜெக்டுகளில் பிஸியாக இருக்கிறார். இதுபோக வெங்கட் பிரபுவிற்கு ஒரு படம், குட் நைட் படத்தின் இயக்குனர் விநாயக் சந்திரசேகருக்கு மற்றும் ஒரு படம் என அவரது லைன் அப் பிசியாக இருக்கிறது.

விக்ரம் வேதா படத்தின் இயக்குனர் புஷ்கர் காயத்ரி, சிவகார்த்திகேயனை சந்தித்து ஒரு கதையை கூறியிருக்கிறார். அந்த கதையும் அவருக்கு ரொம்ப பிடித்துப் போனதால் கால் சீட் கொடுத்துள்ளார். இப்பொழுது அடுத்தடுத்த வேலைகளில் இறங்கி பிசி ஷெடியூலில் இருக்கிறார்.

மதராசி படம் முடிந்த கையோடு வெங்கட் பிரபு படத்தை ஆரம்பிக்க இருக்கிறார்கள். நீண்ட நாட்களாகவே வெங்கட் பிரபு படம் இழுத்துக் கொண்டேபோனது. அதனால் முதலில் இந்த படத்தை முடித்து விடலாம் என திட்டம் போட்டு உள்ளார் எஸ் கே. அதன் பிறகு தான் விநாயக் சந்திரசேகர் படத்திற்கு செல்ல உள்ளார்.

விநாயக் சந்திரசேகர் படம் தள்ளி போனதற்கு முக்கிய காரணம் சிவகார்த்திகேயன் தான் என்கிறார்கள். அந்த கதையில் முக்கியமான ஒரு கதாபாத்திரம் இருக்கிறதாம். சிவகார்த்திகேயனின் அப்பா கதாபாத்திரம் தான் இந்த படத்தில் பெரும் பங்கு வகிக்கிறதாம் அதனால் அதற்கு மாஸ் ஹீரோவை தேர்ந்தெடுத்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் மோகன்லால் தான் இதற்கு சரி என்று செலக்ட் செய்துள்ளனர். அவரது கால்ஷீட் பிசியாக இருப்பதால் இந்த படம் சற்று தள்ளிப் போய் உள்ளது. மற்ற ஆர்டிஸ்ட்களான சத்தியராஜ், ராஜ்கிரண், போன்றவர்களை அப்பாவாக நடிக்க வைக்கலாம் என்று விநாயக் கூறிய போதிலும் மறுத்துவிட்டாராம் எஸ்கே. மோகன்லால் நடித்தால் எல்லா இடத்திலும் ரீச் ஆகும் என திட்டம் போட்டுள்ளார் எஸ் கே. இப்பொழுது கால்ஷீட் பிரச்சனையால் வெங்கட் பிரபு படம் முன்னுரிமை பெற்றுள்ளது.